காங்.,கில் இருந்து விரைவில் விலகுவேன்; பா.ஜ.,வில் சேரவில்லை: அமரீந்தர் சிங்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (15+ 11)
Share
Advertisement
புதுடில்லி: இதுவரை தான் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாகவும், விரைவில் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாகவும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், தான் பா.ஜ.,வில் சேரவில்லை எனவும் கூறியுள்ளார்.பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், மாநில காங்., தலைவர் சித்து உடன் ஏற்பட்ட மோதலால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இரு
AmarinderSingh, Captain Amarinder Singh, அமரீந்தர்சிங், காங்கிரஸ், காங், பஞ்சாப், பாஜ,

புதுடில்லி: இதுவரை தான் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாகவும், விரைவில் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாகவும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், தான் பா.ஜ.,வில் சேரவில்லை எனவும் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், மாநில காங்., தலைவர் சித்து உடன் ஏற்பட்ட மோதலால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இரு நாட்களுக்கு முன்னதாக டில்லி சென்ற அவர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். , இன்று (செப்.,30) தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து பேசினார். பஞ்சாப் எல்லை பாதுகாப்பு குறித்து அவர் விவாதித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அமரீந்தர் சிங் கூறியதாவது: நான் 52 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு சொந்த நம்பிக்கைகள், சொந்த கொள்கைகள் உள்ளன. என்னை கட்சியில் நடத்திய விதம் வருத்தமளிக்கிறது.


latest tamil news


காங்கிரசுக்கு எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளேன். இதுவரை நான் காங்கிரசில் இருந்து விலகவில்லை. ஆனால், விரைவில் காங்.,கில் இருந்து ராஜினாமா செய்வேன். அமித்ஷாவைச் சந்தித்த பிறகு காங்கிரஸ் உட்பட அனைவரும் நான் பா.ஜ.,வில் சேருவேனா என கேள்வி எழுப்பினர். ஆனால், நான் பா.ஜ.,வில் சேரவில்லை. சித்து ஒரு முதிர்ச்சியற்ற நபர். அவர் ஒரு நிலையான எண்ணம் கொண்ட மனிதர் அல்ல என்று நான் மீண்டும் மீண்டும் கூறினேன். அவர் ஒரு அணிக்கு ஏற்ற தலைவர் அல்ல. பஞ்சாப் காங்கிரசை தலைவராக அவர் எப்படி நடத்துவார்?

ராகுல் கட்சிக்கு இளம் ரத்தத்தை கொண்டு வர விரும்புகிறார். அதனால் பழைய தலைவர்களின் ஆலோசனையை கேட்க மறுக்கிறார். கட்சியில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் வரும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு அழிவு ஏற்படுத்தும். தற்போதைய சூழ்நிலையில், சமீபத்திய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி மக்கள் ஆதரவை பெற்று வருவது தெரிய வந்துள்ளது. மக்கள் ஆதரவு காங்கிரசுக்கு குறைந்து வருகிறது. அந்த கணிப்பில் காங்கிரஸ் 20 சதவீத சரிவைக் கண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
30-செப்-202123:53:22 IST Report Abuse
Anbuselvan இம்முறை புஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.
Rate this:
Cancel
விசு பாய் , சென்னை அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
30-செப்-202120:25:54 IST Report Abuse
Indhuindian நல்ல மனிதர் தயிரியசாலி வயசு 80 ஆகப்போகுது இப்ப போயி எதுக்கு கட்சியும் கொடியும் சமூக சேவை செய்யுங்க கிரந்த் சாஹிப் படியுங்க லங்கர்ல வேலை செய்யுங்க மனசுக்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கும்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
01-அக்-202107:01:47 IST Report Abuse
 Muruga Velதுரைமுருகன் கிட்ட சொல்லி பாருங்க ..மெரீனாவிலேயே லங்கர் ஆரம்பிச்சு சேவை செய்யட்டும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X