பொது செய்தி

இந்தியா

சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் நவீன தகனமேடை வசதி

Updated : அக் 01, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு நவீன காஸ் தகன மேடை வசதி புட்டபர்த்தி நகர மக்கள் பயன்படுத்தி கொள்ள ஒப்படைக்கப்பட்டது. மேலாண்மை அறங்காவலர், ஸ்ரீ ஆர்.ஜே. ரத்னாகர் உள்ளூர் அதிகாரிகளுக்கு இதன் செயல்பாட்டு அம்சங்கள் மற்றும் வசதிகளை விளக்கி இந்த நவீன தகன வசதியை ஒப்படைத்தார்.‛அமர்தம்' என இந்த எரியூட்டல் மையத்திற்கு
சத்யசாய், தகனமேடை, புட்டபர்த்தி

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு நவீன காஸ் தகன மேடை வசதி புட்டபர்த்தி நகர மக்கள் பயன்படுத்தி கொள்ள ஒப்படைக்கப்பட்டது. மேலாண்மை அறங்காவலர், ஸ்ரீ ஆர்.ஜே. ரத்னாகர் உள்ளூர் அதிகாரிகளுக்கு இதன் செயல்பாட்டு அம்சங்கள் மற்றும் வசதிகளை விளக்கி இந்த நவீன தகன வசதியை ஒப்படைத்தார்.

‛அமர்தம்' என இந்த எரியூட்டல் மையத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ரூ. 3 கோடிக்கும் மேல் செலவில் இரண்டு ஏக்கரில் அமைந்துள்ள இந்த தகன மையம் நகராட்சி நிர்வாகத்துணையுடன் செயல்படும். அனைத்து சமூகத்தினரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டது. இங்கு இறந்தவர்களுக்கு மரியாதைக்குரிய வகையில் இறுதிச் சடங்குகளை செய்து கொள்ள முடியும்.


latest tamil news2020 ல் சத்யசாய் ஆசியுடன் இந்த திட்டம் துவக்கி முடிக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு அறை , ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி குளியல் வசதிகள், ஒரு அலுவலகம், ஊழியர் குடியிருப்பு மற்றும் பதிவு அறைகள் மற்றும் சடங்குகளை செய்வதற்கான சிறப்பு அறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் உடலை தகனம் செய்ய விரும்பினால் அவரவர் மதச்சடங்குகள் நடத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எரிபொருள், நேரம் எரியூட்டல் தொடர்பான சில தகவல்களை கணினி மூலம் அறிந்து கொள்ளலாம். மாசு ஏற்படாமல் தடுக்க உயரமான புகை போக்கி மூலம் புகை வெளியேறும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. எரிக்கப்பட்ட உடல்களின் சாம்பல் முறையாக பேக் செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் மரியாதையுடன் ஒப்படைக்கப்படும். முற்றிலும் அனைவருக்கும் இலவசமாக மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஏழை மக்களுக்கு நிதிச்சுமையை குறைத்து பெரும் உதவியாக இருக்கும் .

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
01-அக்-202110:38:05 IST Report Abuse
தமிழ்வேள் தமிழகத்து இறுதி கிரியை தளங்கள் அனைத்தும் திருட்டு திராவிட கழக கபோதிகள், அல்லக்கைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன ... குறைத்த பட்சம் திருட்டு திராவிட கழக கபோதிகள் இறந்தால் அவர்களது இறுதிச்சடங்குகள் செய்து வைக்கவோ, கலந்து கொள்ளவோ யாரும் போகாமல் ஒட்டுமொத்த புறக்கணிப்பு செய்யவேண்டும்... திருட்டு கழக கபோதிகள் எப்படி அழுகி செத்தாலும் கவலையில்லை .....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-அக்-202108:14:08 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள் இங்கு சுடுகாட்டில் லஞ்சம் கொடுப்பதற்கு பதிலாக பணம் செலவானாலும் புட்டபர்த்திக்கு சென்று காரியம் செய்யலாம் அப்படியும் லாபம்தான் . இங்கு இவர்கள் குறைந்தது ஏழைகளின் இறுதி சடங்குக்கு வாங்கும் தொகையே குறைந்தது 5000 ரூபாய் பணக்காரர்கள் என்றால் மூன்று மடங்கு நான்கு மடங்கு அதிகம் , இதற்க்கு ஒரு தனியார் வாகனத்தில் அமரர்களை எடுத்துச்சென்றால் லாபம், லஞ்சம் வாங்குவதற்கு அளவே இல்லாமல் போய்விட்டது, சுருக்காட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் மட்டுமே விடிவு பிறக்கும், இங்கும் நல்ல முறையில் எல்லாமே இருக்கிறது கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப ?? வந்தே மாதரம்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
01-அக்-202108:08:24 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஒரு செய்தியை வெளியிட்டால் முழுமையாக வெளியிட வேண்டும். எந்த ஊர். உங்கள் நிருபருக்கு சொல்லுங்கள் ( செய்தியின் முதல் வரியைப் பார்க்கவும்) புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு நவீன காஸ் தகன மேடை வசதி புட்டபர்த்தி நகர மக்கள் பயன்படுத்தி கொள்ள ஒப்படைக்கப்பட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X