பொது செய்தி

இந்தியா

தடுப்பூசிக்கு எதிரான கருத்து பதிவிடும் சேனல்கள் முடக்கப்படும்: எச்சரிக்கும் யூடியூப் நிர்வாகம்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: 'கோவிட் தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட வீடியோக்கள் நீக்கப்படுவதுடன், அவற்றை வெளியிடும் சேனல்கள் உடனடியாக முடக்கப்படும்' என, யூடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.கடந்த இரு ஆண்டுகளாக உலகையே உலுக்கி வரும் கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. ஆனால் பல நாடுகளில் தடுப்பூசி

வாஷிங்டன்: 'கோவிட் தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட வீடியோக்கள் நீக்கப்படுவதுடன், அவற்றை வெளியிடும் சேனல்கள் உடனடியாக முடக்கப்படும்' என, யூடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



கடந்த இரு ஆண்டுகளாக உலகையே உலுக்கி வரும் கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. ஆனால் பல நாடுகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிராக அதிகப்படியானோர் பேசி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் அமெரிக்கவைச் சேர்ந்தவர்களின் யூடியூப் பக்கத்தில் தடுப்பூசிகளைப் பற்றிய தவறான கருத்துகளைப் பரப்பினர். அதை யூடியூப் நிர்வாகம் முடக்கியது.


latest tamil news



இந்நிலையில், யூடியூப் நிறுவனத்தின் துணை தலைவர் மாட் ஹாப்ரின் தெரிவிக்கையில், 'மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரத்தில் இருக்கிறோம். ஆனால், அதைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் பரப்பப்படுவது முறையல்ல. தடுப்பூசிக்கு எதிராக கானொலியை வெளியிட்டால் அந்த விடியோ நீக்கப்படும்; அந்த சேனல் உடனடியாக முடக்கப்படும்' என்றார். இந்த நடவடிக்கையால், வரும் நாட்களில் பேஸ்புக், டுவிட்டர் பக்கத்திலும் தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகளுக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேசியமும் தெய்வீகமும் யாருடையும் பணம் வாங்காமல் செய்தி என்னவே அதை மட்டும்தான் வெளியிடும் உண்மையான செய்தி ஊடகம் தினமலர் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
30-செப்-202118:34:05 IST Report Abuse
ஆரூர் ரங் ஹீலர்ஸை இங்கும் ரிலீஸ் பண்ணி மறுபடியும் தடுப்பூசி எதிர்ப்புக்கு உதவி விட்டார்கள்🤔
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
30-செப்-202117:18:00 IST Report Abuse
ஆனந்த் மத்திய அரசும் ஆண்மையோடு தொலைக்காட்சி சானல்களை முடக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X