தமிழக அரசின் அனுமதியில்லாமல் கர்நாடகா அணை கட்ட முடியாது: அழகிரி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசின் அனுமதியில்லாமல் கர்நாடகா அணை கட்ட முடியாது: அழகிரி

Added : செப் 30, 2021
Share
பேர்ணாம்பட்டு: ‛‛தமிழக அரசின் அனுமதியில்லாமல், கர்நாடகா அணை கட்ட முடியாது,'' என, தமிழக காங்., கட்சி தலைவர் அழகிரி கூறினார்.வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இன்று வந்த அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் அனுமதியில்லாமல் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட முடியாது. அதையும் மீறி அணை

பேர்ணாம்பட்டு: ‛‛தமிழக அரசின் அனுமதியில்லாமல், கர்நாடகா அணை கட்ட முடியாது,'' என, தமிழக காங்., கட்சி தலைவர் அழகிரி கூறினார்.

வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இன்று வந்த அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் அனுமதியில்லாமல் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட முடியாது. அதையும் மீறி அணை கட்டினால் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு பொருள் இல்லாமல் போய் விடும்.

தமிழகத்தின் ஒப்புதலை பெறாமல் அணை கட்டும் வரைவு திட்டத்திற்கு பா.ஜ., அரசு தான் அனுமதியளித்தது. இதனால் வரைவு திட்டத்திற்கு ஏற்பாடு செய்து விட்டார்கள். காங்., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒரே வரி, குறைவான வரி திட்டத்தில் பல மாற்றங்கள் செய்து ஜி.எஸ்.டி., வரியாக பா.ஜ., அரசு அறிவித்தது.

ஆனால், காங்., ஆட்சியில் கொண்டு வராத பணம் மதிப்பிழப்பு, புதிய வேளாண் சட்டம், பொது சொத்து விற்பது போன்ற மக்கள் விரோதமான சட்டங்களை பா.ஜ., கொண்டு வந்துள்ளது. காங்., கடல் போன்றது. இங்கொன்றும், அங்கொன்றுமாக மீன்கள் துள்ளும். ஆனால், மொத்த மீன்களும் துள்ளுவதாக அர்த்தமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X