ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு சிறை

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
பாரீஸ்: கடந்த 2012 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது முறைகேடாக நிதியுதவி வந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்ஸ் அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. 2012ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, முறைகேடாக நிதியுதவி
பிரான்ஸ், சர்கோஸி, நிக்கோலஸ் சர்கோஸி, ஊழல் வழக்கு, சிறை தண்டனை

பாரீஸ்: கடந்த 2012 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது முறைகேடாக நிதியுதவி வந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்ஸ் அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. 2012ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, முறைகேடாக நிதியுதவி வந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாரீஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை சர்கோஸி மறுத்தார். தேர்தல் பிரசார குழுவினரின் நடவடிக்கைகளிலோ, பணம் செலவு செய்யும் விவகாரத்தில் தலையிடவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், இதனை ஏற்காத நீதிமன்றம், பிரசாரத்தின் போது அதிக பணம் செலவு செய்யப்பட்டது சர்கோஸிக்கு தெரிந்திருந்தது. ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை எனக்கூறியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சர்கோஸிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.


latest tamil news


இருப்பினும் அவர் சிறை செல்வதற்கான வாய்ப்பு இல்லை எனவும், இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளதால், தண்டனை நிறுத்திவைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், நீதிமன்ற அனுமதியுடன் வீட்டுக்காவலில் அவர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

சர்கோஸிக்கு, சிறை தண்டனை விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். மற்றொரு ஊழல் வழக்கில், கடந்த மார்ச் மாதம் சர்கோஸிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், இரண்டு ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202110:45:56 IST Report Abuse
அப்புசாமி இவனுங்க கிட்டேருந்துதான் ரஃபல் வாங்கியிருக்கோம்... ரொம்ப நல்லவங்க... ஊழல் பண்ண மாட்டாங்க..
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-அக்-202101:45:06 IST Report Abuse
தமிழவேல் முறைகேடான நிதி, மேலும் ""வரம்பைத் தாண்டிய செலவு""... ஜெயில் தண்டனையின் போது காலில் ஒரு பெல்ட்டுடன் வீட்டில் இருக்கலாம். குறிப்பிட்ட இடத்தை தவிர்த்து வேறு எங்கும் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவருக்கே காசு போட்டால் கொக்கோகோலா வருவதுபோல தீர்ப்பு வருது இங்கே குற்றவாளி சாகும்வரை தீர்ப்பு காத்திருக்கிறது நாம் கேவலமாக சொல்லும் பாக்கில் கூட சில ஜனாதிபதிகள் தண்டனை பெற்றிருக்கிறார்கள் ராமராஜ்யத்தில் PM கேர்ஸ் நிதி பற்றி கூட கேள்வி கேட்க இந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்கே அதிகாரமில்லையாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X