பொது செய்தி

இந்தியா

'நான் கேப்டன் அமரீந்தர் சிங் அல்ல..!' - கால்பந்து வீரர் டுவீட்..!

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021
Share
Advertisement
சண்டிகர்: காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் சித்து உடனான மோதல் காரணமாக பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார்.இதனையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த அமரீந்தர் சிங் தான் காங்கிரஸிலிருந்து விலக முடிவு எடுத்தாலும் பாஜ.,வில் சேரப்
AmrinderSingh, அமரீந்தர்சிங், காங்கிரஸ், பஞ்சாப்

சண்டிகர்: காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் சித்து உடனான மோதல் காரணமாக பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல் பரப்பப்பட்டது. ஆனால் இதுகுறித்து விளக்கமளித்த அமரீந்தர் சிங் தான் காங்கிரஸிலிருந்து விலக முடிவு எடுத்தாலும் பாஜ.,வில் சேரப் போவதில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தான் காங்கிரஸ் கட்சியில்தான் தற்போது இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அமரீந்தர் சிங் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வேரூன்ற அடிக்கல் நாட்டிய மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஆவார். ஆனால் சமீபத்தில் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசியிருந்தார். அமரீந்தர் சிங் கட்சியை விட்டு விலகுவது அவருடைய சொந்த விருப்பம், அதில் கட்சியின் தலைமை தலையிடாது என்று முன்னதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்திருந்தார்.

கடந்த மூன்று நாட்களாக அமரீந்தர் சிங் குறித்த விவாதங்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உருவானது.


latest tamil news


இதனால் அமரீந்தர் சிங் ஹேஷ்டேக் டிவிட்டரில் வைரல் ஆகியது. அமரீந்தர் சிங் என்கிற பெயரில் இந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஒருவர் உள்ளார். இவரும் டுவிட்டரில் பிரபலமானவர். பெயர் ஒற்றுமை காரணமாக கோல்கீப்பர் அமரீந்தர் சிங்கை, கேப்டன் அமரீந்தர் சிங் தொடர்பான டுவீட்டுகளில் பலர் டேக் செய்துள்ளனர்.

இதனை அடுத்து கோல் கீப்பர் அமரீந்தர் சிங் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தன்னை கேப்டன் என்று நினைத்துக்கொண்டு பலர் அவர் தொடர்பான டுவீட்டுகளில் டேக் செய்வதாக கூறிய அவர், தான் கால்பந்து வீரர் என்றும் தன்னை யாரும் இவ்வாறு டேக் செய்யவேண்டாம் என்றும் டுவிட் செய்துள்ளார்.



இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அடுத்து வரும் போட்டிகளுக்கு, ஹாக்கி அணி கோல்கீப்பருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X