சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்உலக சைவ தினம்உணவில் பல வகைகள் உள்ளன. இந்நிலையில் சைவ வகை (வெஜிடேரியன்) உணவுகளின் நன்மைகள், பலன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்.1ல் உலக சைவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வகை உணவு உடலில் கொழுப்பு அதிகம் சேராமல் தடுக்கிறது. இருதய, கேன்சர் பாதிப்பில் இருந்தும் தடுக்கிறது. 1977ல் வட அமெரிக்க வெஜிடேரியன் கழகம் இத்தினத்தை துவக்கியது. காய்கறி,

அறிவியல் ஆயிரம்

உலக சைவ தினம்


உணவில் பல வகைகள் உள்ளன. இந்நிலையில் சைவ வகை (வெஜிடேரியன்) உணவுகளின் நன்மைகள், பலன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்.1ல் உலக சைவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வகை உணவு உடலில் கொழுப்பு அதிகம் சேராமல் தடுக்கிறது. இருதய, கேன்சர் பாதிப்பில் இருந்தும் தடுக்கிறது. 1977ல் வட அமெரிக்க வெஜிடேரியன் கழகம் இத்தினத்தை துவக்கியது. காய்கறி, பழங்கள், பருப்பு, தானியங்களை உள்ளடக்கிய சைவ உணவு நமது உடல்நலனுக்கு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக உள்ளது.

தகவல் சுரங்கம்

உலக முதியோர் தினம்


முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்.1ல், உலக முதியோர் தினம் கடை பிடிக்கப்படுகிறது. முதியோர் குழந்தைகளுக்கு சமம் என கூறுவர். 60 வயதினை கடந்த இவர்களின் அறிவு, வழிகாட்டுதல் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியம். அவர்களை சுமையாக கருதாமல், வரமாக கருதுங்கள். உடலளவில் தளர்ந்து இருக்கும் இவர்களை மனதளவில் தேற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இன்னும் 30 ஆண்டுகளில் (2050ல்) உலகில் முதியோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து 150 கோடியாக இருக்கும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X