பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,612 ஆக சற்று குறைந்துள்ளது: 1,626பேர் நலம்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,624-ல் இருந்து 1,612 ஆக சற்று குறைந்துள்ளது. 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,626 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,53,327 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்த 1,612பேருக்கு கோவிட் உறுதியாகி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,624-ல் இருந்து 1,612 ஆக சற்று குறைந்துள்ளது. 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,626 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,53,327 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தை சேர்ந்த 1,612பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,63,789ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,69,93,842 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 924 பேர் ஆண்கள், 688 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,54,831 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 11,08,920ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,626 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,11,061ஆக உயர்ந்துள்ளது.

28 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 9 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 19 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,575 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை



சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக இருந்த நிலையில் இன்று (29ம் தேதி) 189ஆக அதிகரித்துள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news




latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
30-செப்-202122:11:04 IST Report Abuse
Tamilan கொரோனா குறைந்தாலும் கொரானா நாமம் பாடுவது மட்டும் குறையவில்லை. ஒருமுறை இருமுறையல்ல . தினமும் நூறுமுறை , விஞ்சான போனை கையில் எடுக்கும்போதெல்லாம் கொரோனா நாமம் கேட்டுவிட்டுதான் மனிதர்களுடன் பேச வேண்டும் . என்னே வளர்ச்சி?. விஞ்சான வளர்ச்சி ?. கேடுகெட்ட அரசியல் சட்டத்தை நாட்டை விட்டு துரத்தினால்தான் நாடும் உலகமும் முன்னேறும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X