பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ரூ.1,000 கோடிக்கு சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
புது டில்லி: இந்தியாவில் முதல் முறையாக ரூ.1,000 கோடிக்கு சொத்து வைத்திருக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. ஐ.ஐ.எப்.எல்., வெல்த் மற்றும் ஹூருன் இந்தியாவின் 2021-க்கான பணக்காரர்கள் பட்டியலில் இத்தகவல் வெளியாகியுள்ளது. மேற்சொன்ன நிறுவனத்தின் அறிக்கையின் படி, 119 நகரங்களைச் சேர்ந்த 1007 பேர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர்கள். இப்பட்டியலில் 894

புது டில்லி: இந்தியாவில் முதல் முறையாக ரூ.1,000 கோடிக்கு சொத்து வைத்திருக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. ஐ.ஐ.எப்.எல்., வெல்த் மற்றும் ஹூருன் இந்தியாவின் 2021-க்கான பணக்காரர்கள் பட்டியலில் இத்தகவல் வெளியாகியுள்ளது.latest tamil newsமேற்சொன்ன நிறுவனத்தின் அறிக்கையின் படி, 119 நகரங்களைச் சேர்ந்த 1007 பேர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர்கள். இப்பட்டியலில் 894 நபர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அதில் 229 பேர் புது முகங்கள். 113 பேரின் சொத்து மதிப்பு சரிவை சந்தித்துள்ளது. மற்றும் 51 பேர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் 237 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த எண்ணிக்கை 58 அதிகம்.

மருந்துத் துறையைச் சேர்ந்த 130 நபர்கள் இப்பட்டியலில் நுழைந்துள்ளனர். அத்துறையின் பங்களிப்பு தான் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக ரசாயனம் மற்றும் மென்பொருள் துறையிலிருந்து ஏராளமானோர் இப்பட்டியலில் புதிதாக நுழைந்துள்ளனர். இப்பட்டியலில் உள்ள இளம் வயது கோடீஸ்வரரின் வயது 23 ஆகும். வழக்கம் போல ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 10 ஆவது ஆண்டாக இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக திகழ்கிறார்.


latest tamil newsஅவருக்கு அடுத்ததாக ரூ.5.5 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கவுதம் அதானி மற்றும் குடும்பத்தினர் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளனர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு பட்டியலில் 4-ம் இடத்தில் இருந்தார். மூன்றாம் இடத்தை எச்.சி.எல்., நிறுவனர் சிவ நாடார் 2.3 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தாண்டும் தக்க வைத்துக்கொண்டுள்ளார். டிசம்பர் 2020 உடன் முடிவடைந்த ஓராண்டில், ஆயிரம் கோடி டாலர் வருவாயை தாண்டிய மூன்றாவது ஐ.டி., நிறுவனம் எச்.சி.எல்., ஆகும்.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
01-அக்-202115:51:20 IST Report Abuse
Bhaskaran எழுபதுகளில் ஆயிரம் கோடிரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஏழு மட்டுமே அவற்றில் தமிழ்நாட்டு நிறுவனம் டீ வி எஸ் குழுமம் மட்டுமே என்று படித்துள்ளேன் ஐம்பதாண்டுகளில் இவ்வளவு வளர்ச்சி
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
01-அக்-202111:54:36 IST Report Abuse
elakkumanan ஏம்பா , இந்த லிஸ்டில் வெறும் கோர்ப்போரேட் கம்பெனி மட்டும்தானே கணக்கு எடுத்திருக்கீங்க...ஆமா, சன் டிவி, கலைஞர் டிவி, ......ஸ்பைஸ் ஜெட், சுமங்கலி கேபிள் விஷன், ஒரு அஞ்சாறு சாராய கம்பெனி, இருநூறு கப்பல் வச்சு கஷ்ட ஜீவனம் செய்வோர் போன்ற குடிசைத்தொழில் எதுவும் சேர்க்கப்படவில்லைதானே... கோர்ப்போரேட் தான் ஒழிக ...குடிசை தொழில் வாழ்க.. கவனமா லிஸ்ட் போடுங்கப்பா... இருநூறு ரூவாய்க்கு கூவினாலும் எங்க ஆளுக கொள்கையை விட்டு கொடுக்க மாட்டானுவோ...டுமீல் திராவிடம் நா ஒரு பயம் இருக்கணும்...
Rate this:
Cancel
01-அக்-202110:42:03 IST Report Abuse
அப்புசாமி இங்கே நவீன ராபின்ஹுட் ஆட்சி நடக்குது. அதாவது ஏழைகள், மத்திய வர்க்கத்தினரிமிருந்து உருவி பணக்காரங்களுக்கு குடுத்துருவாங்க. ஏழைப்பங்காள சௌக்கிதார் அரசு வாழ்க... வெல்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X