அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரை அவதூறாக பேசியவர் கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் செந்தில் நகரை சேர்ந்தவர் முருகன். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், நேற்று வாட்ஸ் ஆப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிராக அறுவறுக்கத்தக்க வகையில் அவதூறாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழக முதல்வர் குடும்பத்தினரை வேலூர் சிறையில் அடைக்க வேண்டும். அவருக்கு நாவடக்கம் வேண்டும். நாக்கை அறுத்து விடுவேன். திராவிட

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் செந்தில் நகரை சேர்ந்தவர் முருகன். பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், நேற்று வாட்ஸ் ஆப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிராக அறுவறுக்கத்தக்க வகையில் அவதூறாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் தமிழக முதல்வர் குடும்பத்தினரை வேலூர் சிறையில் அடைக்க வேண்டும். அவருக்கு நாவடக்கம் வேண்டும். நாக்கை அறுத்து விடுவேன். திராவிட முன்னேற்ற கழகமா. திருடர்கள் முன்னேற்ற கழகமா. இந்து மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. அவ்வாறு பேசினால் உன் நாக்கை அறுத்து விடுவேன் என்றும், நாட்டை ஆள உனக்கு என்ன அருகதை இருக்கிறது. உங்கள் மனைவி துர்கா கோவிலுக்கு போவதை தடுத்து நிறுத்தி கொள் என்றும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.

மேலும், அடுத்த முதல்வர் அன்புமணி தான் என்றும், தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் சம்பாதித்த சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த கெலமங்கலம் நகர செயலாளர் கருணாநிதி முருகனிடம் சென்று கேள்வி எழுப்பினார்.

அதனால் ஆத்திரம் அடைந்த முருகன், கத்தியை எடுத்து கொலை செய்து விடுவேன் நான் யார் தெரியுமா என அதிகார தோரணையில் மிரட்டினார். இது தொடர்பாக நகர செயலாளர் கருணாநிதி, கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X