வருகிறது: பலாக்காய் பர்கர்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வருகிறது: பலாக்காய் பர்கர்

Added : செப் 30, 2021
Share
மலேஷியாவில் பலாப் பழம் அதிகம் விளைகிறது. இதனால் பலாக் காய்களை, இறைச்சிக்கு மாற்று உணவாக மாற்ற முனைகிறது இர நோவா எல்.எல்.பி., பலாக் காயில் இயற்கை நார்ச் சத்துக்கள் இருப்பதால், அது ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.அதைவிட முக்கியமாக, துரித உணவான பர்கருக்கு நடுவே வைக்கப்படும் கட்லெட் போன்ற இறைச்சி துண்டுக்கு மாற்றாக, பலாக் காய் மற்றும் காளான் கட்லெட்டை அறிமுகப்படுத்தி
 வருகிறது: பலாக்காய் பர்கர்

மலேஷியாவில் பலாப் பழம் அதிகம் விளைகிறது. இதனால் பலாக் காய்களை, இறைச்சிக்கு மாற்று உணவாக மாற்ற முனைகிறது இர நோவா எல்.எல்.பி., பலாக் காயில் இயற்கை நார்ச் சத்துக்கள் இருப்பதால், அது ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.

அதைவிட முக்கியமாக, துரித உணவான பர்கருக்கு நடுவே வைக்கப்படும் கட்லெட் போன்ற இறைச்சி துண்டுக்கு மாற்றாக, பலாக் காய் மற்றும் காளான் கட்லெட்டை அறிமுகப்படுத்தி உள்ளது இரா நோவா. பலாக்காய் பர்கரில் 8 முதல் 10 கிராம் வரை நார்ச் சத்து உண்டு. மலேஷியாவில் பலாக் காய் சமையலுக்குப் பயன்படுகிறது. அதில் ஒரு புதுமையை சேர்த்திருப்பதாலும், அது இறைச்சி போலவே சுவையைத் தரக்கூடியது என்பதாலும், வரவேற்பு அதிகரித்துள்ளது.

தற்போதைக்கு, இறைச்சிப் பிரியர்களை ஈர்ப்பதற்காக, 70 சதவீத பலாக் கறி மற்றும் 30 சதவீதம் கோழி அல்லது மாட்டிறைச்சியை வைத்து செய்த பர்கரையும் அந்நிறுவனம் தயாரித்து துரித உணவகங்களுக்கு விற்பனை செய்கிறது.பலாக்காயை துரித உணவாக மாற்றிய கையோடு, நக்கெட்ஸ், வெஜ் பால்ஸ், ஹாட் டாக் மற்றும் கொத்துக் கறி போன்ற வடிவங்களிலும் பலாக் காயை தயாரித்து விற்பனை செய்ய மலேஷியாவில் ஆய்வுகள் தொடர்கின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X