சம்பவம் செய்தி

தமிழ்நாடு

5 மாத குழந்தை கடத்தல்! நால்வரிடம் விசாரணை தீவிரம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே, 5 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது சம்பவத்தில், 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 35; ஊர் ஊராகச் சென்று பழைய துணி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா, 27. இவர்களுக்கு, ஐந்து மாத பெண் குழந்தை உட்பட, 4 குழந்தைகள் உள்ளனர். இவர்கள், கடந்த ஒருவாரமாக கோவை மாவட்டம்
 5 மாத குழந்தை கடத்தல்! நால்வரிடம் விசாரணை தீவிரம்

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே, 5 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது சம்பவத்தில், 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 35; ஊர் ஊராகச் சென்று பழைய துணி விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா, 27. இவர்களுக்கு, ஐந்து மாத பெண் குழந்தை உட்பட, 4 குழந்தைகள் உள்ளனர். இவர்கள், கடந்த ஒருவாரமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தங்கி துணி விற்பனை செய்து வருகின்றனர். 28ம் தேதி இரவு ஆனைமலை மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் மணிகண்டன் துணி விற்பனை செய்துள்ளார்.

அப்போது, சங்கீதா குழந்தைகளை வைத்து அமர்ந்திருந்த போது அங்கு வந்த ஒருவர், குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவதாக பணம் கொடுத்து, குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி ஐந்து மாத குழந்தையை கையில் வாங்கிக்கொண்டார்.

சங்கீதா உணவு வாங்க அருகில் சென்ற போது, அந்த நபர் மற்றொருவருடன் பைக்கில் பொள்ளாச்சி நோக்கி 5 மாத குழந்தையை கடத்திச் சென்றார். ஒரு இன்ஸ்பெக்டர், ஏழு எஸ்.ஐ.,க்கள் உள்பட, 8 தனிப்படை அமைத்து ஆனைமலை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இன்று (30ம் தேதி) இரவு, குழந்தையை கடத்திய இருவர் மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதி என, நான்கு பேரை பிடித்து ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X