சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

குப்பைக்குப் போகாத குழந்தை ஆடைகள்

Added : செப் 30, 2021
Share
Advertisement
உலகில் தினமும் லட்சக் கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. அக்குழந்தைகளுக்கு 'ரோம்ப்பர்' போன்ற உடைகளை பெற்றோர் ஆசையாய் வாங்கி அணிவிக்கின்றனர். பின் குழந்தை சில மாதங்களில் வளர்ந்ததும், அந்த பருத்தி உடைகள் குப்பைக்குத் தான் போகின்றன.பருத்தியை விளைவிக்க பல ஆயிரம் லிட்டர்கள் தண்ணீர் செலவாகிறது. மேலும் அந்த உடையை உருவாக்கும் வரை பலவகை மாசுபாடும் உருவாகிறது. எனவே
 குப்பைக்குப் போகாத குழந்தை ஆடைகள்

உலகில் தினமும் லட்சக் கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. அக்குழந்தைகளுக்கு 'ரோம்ப்பர்' போன்ற உடைகளை பெற்றோர் ஆசையாய் வாங்கி அணிவிக்கின்றனர். பின் குழந்தை சில மாதங்களில் வளர்ந்ததும், அந்த பருத்தி உடைகள் குப்பைக்குத் தான் போகின்றன.

பருத்தியை விளைவிக்க பல ஆயிரம் லிட்டர்கள் தண்ணீர் செலவாகிறது. மேலும் அந்த உடையை உருவாக்கும் வரை பலவகை மாசுபாடும் உருவாகிறது. எனவே குழந்தைகளுக்கான ஆடைகளை, குப்பைக்குப் போகாமல், துவைத்து புதிதுபோல் ஆக்கி, ஆறு குழந்தைகள் வரை பயன்படுத்தலாம் என்கின்றனர், நெதர்லாந்தைச் சேர்ந்த குழந்தைகள் உடைத் தயாரிப்பாளர்களான ரெட் ஓர்க்கா.

பெற்றோர் குழந்தை பிறந்தவுடன் ரெட் ஓர்க்காவின் உடைகளுக்கு, மாதாந்திர 'சந்தா' கட்டணம் செலுத்தவேண்டும். ரோம்ப்பர் வகை உடைகள் வீடு தேடி வரும்.அதை குழந்தைக்கு அணிவித்து, பயன்படுத்திய பின், பழைய உடைகளை கறைகளின்றி துவைத்து மீண்டும் ரெட் ஓர்க்காவுக்கே திருப்பி அனுப்பவேண்டும். அவர்கள் அதை அடுத்து ஐந்து குழந்தைகள் வரை அதே ரோம்ப்பர்களை பயன்படுத்தத் தருவர்.

பிறகு? மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பிவிடுவர்.இந்த புதுமையான திட்டம் மூலம், ஒரு குழந்தைக்கு 5,400 லிட்டர் தண்ணீரையும், 48 சதவீதம் குறைவான கார்பன்டையாக்சைடு மாசையும் குறைக்க முடியும் என்கிறது ரெட் ஓர்க்கா. நல்ல திட்டம் பிறந்திருக்கிறது. இது உலகெங்கும் பரவுமா?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X