சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

நடக்குமா, நடக்காதா?

Added : செப் 30, 2021
Share
Advertisement
நடக்குமா, நடக்காதா?'பதவியில் இருக்கும் வரை தான் அவருக்கு கிராக்கி. பதவி பறிபோன அடுத்த நிமிடமே செல்லாக்காசு ஆகி விடுவார்' என, சத்தீஸ்கர் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேலை கடுமையாக விமர்சிக்கிறார், அந்த மாநில சுகாதார அமைச்சர் சிங் தியோ. சத்தீஸ்கரில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, முதல்வர் பதவிக்கு கடும் போட்டி

அக்கம் பக்கம்


நடக்குமா, நடக்காதா?



'பதவியில் இருக்கும் வரை தான் அவருக்கு கிராக்கி. பதவி பறிபோன அடுத்த நிமிடமே செல்லாக்காசு ஆகி விடுவார்' என, சத்தீஸ்கர் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேலை கடுமையாக விமர்சிக்கிறார், அந்த மாநில சுகாதார அமைச்சர் சிங் தியோ. சத்தீஸ்கரில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதில் காங்., மேலிடம் தலையிட்டது. இறுதியில், முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு பூபேஷ் பாகேலும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு சிங் தியோவும் சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், முதல்வர் நாற்காலியில் இருந்து எழுந்திருக்க மறுக்கிறார் பாகேல். சிங் தியோவோ, 'ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி முதல்வர் பதவியிலிருந்து பாகேல் விலக வேண்டும்' என, பிடிவாதம் பிடிக்கிறார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தி, எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் இழுந்து விட்டார் பாகேல். சிங் தியோவுக்கு சொற்ப எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இதனால் முதல்வர் பதவியை அடைய முடியாமல் புலம்பி தீர்க்கிறார்.'இரண்டு மாதத்துக்கு மட்டுமாவது என்னிடம் முதல்வர் பதவியை கொடுத்தால், நிலைமை தலைகீழாகி விடும். எல்லா எம்.எல்.ஏ.,க்களையும் என் பக்கம் இழுந்து விடுவேன். ஆனால் அது நடக்குமா...' என, சோகத்துடன் கூறுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X