சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: சென்னை காமராஜர் சாலையில், மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில், ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த சிலை, பறவைகளின் கூடாரமாக மாறிவிட்டது. முதல்வர் இதில் தலையிட்டு, சிலையை ஒழுங்காக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் சிலை பராமரிப்பை, அ.தி.மு.க.,விடம் ஒப்படைக்க வேண்டும்.'டவுட்'

'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: சென்னை காமராஜர் சாலையில், மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில், ஜெயலலிதாவுக்கு வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இப்போது அந்த சிலை, பறவைகளின் கூடாரமாக மாறிவிட்டது. முதல்வர் இதில் தலையிட்டு, சிலையை ஒழுங்காக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் சிலை பராமரிப்பை, அ.தி.மு.க.,விடம் ஒப்படைக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: இப்படி எல்லாம் நடக்கும் என்பதால் தான், ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, அவருக்கு சிலை வைக்க அவர் அனுமதிக்கவில்லையோ என்ற, 'டவுட்' வருகிறது. எனினும், இப்போது அவர் உயிருடன் இருந்திருந்தால், பறவைகளுக்காவது கூடாரமாக இருக்கிறோமே என எண்ணி மகிழ்ந்திருப்பாரோ!

தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி: நாம் விட்டு கொடுப்பதும், கூட்டணியில் இருப்பவர்கள் விட்டு கொடுப்பதும் தான் கூட்டணி. கூட்டணியில், இடங்களை பகிர்ந்து கொடுப்பதில் நிறைய சிரமம் உள்ளது. கூடுதல், குறைவு என்பது பற்றி யோசிக்கக் கூடாது.

'டவுட்' தனபாலு: அந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர், 'விட்டுக் கொடுத்து, விட்டுக் கொடுத்தே பாழாய் போனோம். ஆனால், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் விட்டுக் கொடுப்பதே இல்லை. வருத்தமும், குறையும் நமக்கு மட்டும் தான்' என, அதிருப்தியுடன் கூறியது உங்கள் காதுகளில் விழுந்திருக்காது. ஏனெனில் நீங்கள் கூட்டணியை காப்பாற்ற பாடுபடுகிறீர்கள் என்பதில், கூட்டணிகளுக்கு, 'டவுட்'டே வராது!


பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி:
திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, புதுச்சேரி வானொலி நிலையங்களை, தொடர் ஒலிபரப்பு நிலையங்களாக மாற்ற, இவற்றின் கட்டுப்பாட்டு அமைப்பான, 'பிரசார் பாரதி' முடிவு செய்துள்ளது. இது, இந்த நிலையங்கள் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை சிதைக்கும். எனவே, இந்த வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை, பிரசார் பாரதி கைவிட வேண்டும்.

'டவுட்' தனபாலு: சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தில், 'டிவி'களே தள்ளாடுகையில், வானொலி நிலையங்கள் எம்மாத்திரம்? மேலும், இந்த அறிக்கை எழுதும் முன், இந்த ஐந்து வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகள் ஒன்றைக் கூட கேட்டிருக்க மாட்டீர்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை. அந்த அளவுக்குத் தான் இவற்றின் செயல்பாடுகளும் இருக்கின்றன!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-அக்-202115:24:08 IST Report Abuse
D.Ambujavalli ரேடியோப் பெட்டிகள் வாழ்வு 'இறந்த ' காலமாகி, டிவியும் அந்த லிஸ்டில் சேர காத்திருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X