சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

முதல்வரின் கணக்கில் இடம்பெற்றவை!

Added : செப் 30, 2021
Share
Advertisement
முதல்வரின் கணக்கில் இடம்பெற்றவை!கு.காந்தி ராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில், ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களுக்குள், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமைப்பட்டு கொள்கிறார்.தி.மு.க., 505 வாக்குறுதிகள் அளித்தாலும், அதில் சிலவற்றை தான் மக்கள் எதிர்பார்த்து ஓட்டு


முதல்வரின் கணக்கில் இடம்பெற்றவை!கு.காந்தி ராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில், ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களுக்குள், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டியுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமைப்பட்டு கொள்கிறார்.
தி.மு.க., 505 வாக்குறுதிகள் அளித்தாலும், அதில் சிலவற்றை தான் மக்கள் எதிர்பார்த்து ஓட்டு அளித்தனர்.'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என வாக்குறுதி வழங்கினர். தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 'நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இதை தானே, முந்தைய அ.தி.மு.க., அரசும் செய்தது... தி.மு.க., அரசின் தீர்மானத்தால், எந்த பயனும் விளையப் போவதில்லை.நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், கொரோனா நிவாரணம் 4,000 ரூபாய், ஆவின் பால் விலையில் 1 லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு ஆகிய மூன்று வாக்குறுதிகளை மட்டுமே, தி.மு.க., அரசு முழுமையாக நிறைவேற்றியிருக்கிறது.
கொரோனா நிவாரணத்தைப் பொறுத்தவரை, முந்தைய பழனிசாமி அரசும் இதே போன்ற நிதியுதவி வழங்கியிருக்கிறது.பெட்ரோல் விலையில் 1 லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என வாக்குறுதி அளித்து விட்டு, இப்போது 3 ரூபாய் மட்டுமே குறைத்துள்ளனர். டீசலுக்கு, 3 ரூபாய் விலை குறைக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
தி.மு.க.,வின் வெற்றிக்கே கீழ்கண்ட வாக்குறுதிகள் தான் பிரதான காரணமாக இருந்தன.
* இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் வழங்கப்படும்
* அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் முறை அமல்படுத்தப்படும்
* எல்.பி.ஜி., காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் அளிக்கப்படும்
* மின் கட்டணம் மாதந்தோறும் கணக்கிடப்படும்
* ரேஷன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்; உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்
* கல்விக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்
* பழங்குடியினர் பட்டியலில், மீனவர் சேர்க்கப்படுவர். மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5,000 ரூபாயில் இருந்து 8,000 ரூபாயாக உயர்த்தப்படும்
* சாலையோர சிறு வியாபாரிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன்
* முதியோர் ஓய்வூதிய தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்
* தொழில் நிறுவனங்களில் 75 சதவீத பணியிடங்கள் தமிழர்களுக்கே வழங்கப்படும்
* நெல்லுக்கு ஆதரவு விலை குவிண்டாலுக்கு 2,500 ரூபாய்; கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தப்படும்
இப்படி முக்கிய வாக்குறுதிகள் எதையும், தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.
சிலை அமைத்தல், மணிமண்டபம் கட்டும் அறிவிப்பு எல்லாம், முதல்வர் ஸ்டாலினின் கணக்கில் வருகிறதே தவிர, முக்கியமான வாக்குறுதிகள் ஏதும் அதில் இடம்பெறவில்லை.


மாநில மொழியில் பெயர் சூட்டுங்கள்!வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசு, ஏராளமான மக்கள் நல திட்டங்களை வடிவமைத்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இருந்தும் அவை, மத்திய அரசின் திட்டங்கள் என்பது மக்களுக்கு புரிவதில்லை. இதனால் மத்தியில் ஆளும் கட்சியின் செல்வாக்கு, மாநிலங்களில் உயரவில்லை.தமிழகத்தில், 'தாமரை' மலராமல் இருப்பதற்கு காரணம், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எவை என்பது, மக்களுக்கு தெரியவில்லை என்பது தான்.
அதற்கு காரணம், மாநில மொழியில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பரப்புரை செய்யாமல் இருப்பது தான்.உதாரணத்திற்கு, 'அடல் பென்ஷன் யோஜனா, ஆம் ஆத்மி பீமா யோஜனா, ஜன் தன் யோஜனா, பிரதான் மந்திரி சுரக் ஷா யோஜனா, பிரதான் மந்திரி ஜன் அவுஷதி யோஜனா, ஜல் ஜீவன்' போன்ற திட்டங்களின் பெயர்கள் மக்களுக்கு புரியவில்லை.
இப்படி பெயர் சூட்டப்படுவதாலும், அதை அப்படியே மாநில மொழியில் கூறுவதாலும், ஹிந்தி பேசாத மக்கள் மத்தியில், மத்திய அரசின் சாதனைகள் எடுபடாமல் போய் விடுகின்றன.எந்த ஒரு திட்டமும் மக்களை சென்றடைய வேண்டுமானால், அது அவர்களின் தாய் மொழியிலேயே இருக்க வேண்டும்.காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில், 'இருபது அம்சத் திட்டம்' தமிழிலேயே பிரசாரம் செய்யப்பட்டு, அதனால் பிரபலமானது.
கிறிஸ்துவ மதத்தை உலகெங்கும் பரப்பிய மிஷனரிகள், உலக மொழிகளில் பைபிளை மொழி பெயர்த்தனர். ஆங்காங்கே பேசப்படும் மொழிகளை கற்று, மக்களிடம் மதத்தை பரப்பினர். இது அரசியலுக்கும் பொருந்தும்.
மக்கள் நலத் திட்டங்களுக்கு, அந்தந்த மாநில மொழிகளில் பெயர் சூட்டப்பட்டால், அது மத்திய அரசை ஆளும் கட்சிக்கு பயன் அளிக்கும்.


தமிழக அரசின் தேவையற்ற உத்தரவு!வ.சம்பத்குமார், பழநி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 28ம் தேதி செவ்வாய் கிழமை அன்று பழநி அடிவாரம், திருஆவினன்குடி கோவில், கிரிவீதி, மலைக்கோவில் போன்ற இடங்களில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்
குவிந்திருந்தனர்.அன்று, எந்த முக்கியமான பண்டிகையும் இல்லை. ஆனாலும் பக்தர் கூட்டம் அலைமோதியது. கடைகளில் நெருக்கியடித்தபடி மக்கள் பொருட்களை வாங்கினர்.பெரும்பாலானோர் முக கவசம், சமூக இடைவெளி என கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் பின்பற்றவில்லை.கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களில் பெரும்பாலானோர் மத்திய - மாநில அரசு ஊழியர்களாகவோ, தனியார் பணியாளர்களாகவோ இருப்பர். அவர்கள் அத்தனை பேரும் அன்றைய தினம் விடுப்பு எடுத்து தான் கோவிலுக்கு வந்திருப்பர். இதனால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கும்?இவற்றிற்கு எல்லாம் என்ன காரணம்? வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை மூடும் தமிழக அரசின் தேவையற்ற
உத்தரவு தான்.அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறந்திருந்தால், விடுமுறை உட்பட அவரவருக்கு வசதிப்பட்ட நாளில் சுவாமி தரிசனம் செய்வர்; கூட்டம் அலைமோதுவதும் குறையும்.'கொரோனாவை தடுக்கிறோம்' என, கோவில்களை மூன்று நாட்கள் மூடுவதால் தான், மற்ற நான்கு நாட்களும் கூட்டம் அலை மோதுகிறது.வழக்கம் போல அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்கப்பட்டால், பக்தர்கள் கூட்டம் ஒழுங்குபடுத்தப்படும். தமிழக அரசு புரிந்து கொள்ளுமா?

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X