பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 30, 2021
Share
Advertisement
அக்., 1, 1928விழுப்புரத்தில், 1928 அக்., 1ம் தேதி பிறந்தார், வி.சி.கணேசன். பொன்னுசாமி பிள்ளை, எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கே., உள்ளிட்டோரின் நாடக கம்பெனிகளில் சேர்ந்து நடித்தார். சத்ரபதி சிவாஜி நாடகத்தில் நடித்ததால், 'சிவாஜி கணேசன்' என அழைக்கப்பட்டார்.கடந்த 1952-ல், பராசக்தி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை, முதல் மரியாதை,

இதே நாளில் அன்று


அக்., 1, 1928



விழுப்புரத்தில், 1928 அக்., 1ம் தேதி பிறந்தார், வி.சி.கணேசன். பொன்னுசாமி பிள்ளை, எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கே., உள்ளிட்டோரின் நாடக கம்பெனிகளில் சேர்ந்து நடித்தார். சத்ரபதி சிவாஜி நாடகத்தில் நடித்ததால், 'சிவாஜி கணேசன்' என அழைக்கப்பட்டார்.கடந்த 1952-ல், பராசக்தி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை, முதல் மரியாதை, படையப்பா உட்பட, 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தென்மாநில நடிகர் சங்கத் தலைவராக, எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.ஆரம்ப காலத்தில், திராவிட இயக்க அரசியலில் ஈடுபட்டார். பின், காங்கிரசில் இணைந்தார். 1982ல் ராஜ்யசபா எம்.பி.,யானார். 1987ல், 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை துவக்கினார்.
'பத்மஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியே, தாதா சாகிப் பால்கே' உட்பட பல்வேறு விருதுகளை பெற்றார். அமெரிக்காவின் நயாகரா சிட்டியின் ஒருநாள் மேயராகும் கவுரவம் இவருக்கு கிடைத்தது. 2001 ஜூலை 21ல், தன் 72வது வயதில் காலமானார்.
'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X