ஆகஸ் பாதுகாப்பு ஒப்பந்தம், பிரான்ஸ் அதிருப்தி; மோரிசன் விளக்கம்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கான்பெர்ரா: அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்டது ஆகஸ் பாதுகாப்பு ஒப்பந்தம். இதனால் தற்போது பிரான்ஸ் அதிருப்தி அடைந்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கமளித்துள்ளார். இந்தோ பசிபிக் பகுதி மற்றும் தென்சீனக் கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முன்னதாக

கான்பெர்ரா: அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்டது ஆகஸ் பாதுகாப்பு ஒப்பந்தம். இதனால் தற்போது பிரான்ஸ் அதிருப்தி அடைந்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கமளித்துள்ளார்.latest tamil newsஇந்தோ பசிபிக் பகுதி மற்றும் தென்சீனக் கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முன்னதாக சீனாவிடமிருந்து இந்தோ பசிபிக் பகுதியில் உள்ள நாடுகள் தங்களை தற்காத்துக்கொள்ள நீர்மூழ்கி கப்பலில் இருந்து தாக்கும் தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருதினார்.

இதேபோன்ற ஒத்தக் கருத்துடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் இருந்ததை அடுத்து அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் ஆகஸ் ஒப்பந்தத்தை இட்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் பல கோடி மதிப்பிலான அணு ஆயுதங்களைத் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரித்துக் கொடுக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பல்கள் மூலமாக சீனாவின் அச்சுறுத்தலை தெற்காசிய பகுதியில் கட்டுப்படுத்த மூன்று நாடுகளும் திட்டமிட்டன. இதற்கு ஜப்பான், இந்தியா உள்ளிட்ட குவாட் நாடுகளும் ஒத்துழைப்பு அளித்தன. இதற்கு தற்போது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் இணைய விரும்பியது பிரான்ஸ். ஆனால் பிரான்ஸ் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாதது அதிபர் இமானுவேல் மேக்ரானை அதிருப்தி அடையச் செய்துள்ளது. முன்னதாக பல கோடி டாலர் செலவில் ஆஸ்திரேலியாவுக்கு நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க பிரான்ஸ் திட்டமிட்டிருந்தது. தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த ஆகஸ் ஒப்பந்தத்தின் காரணமாக பிரான்ஸின் தொழில் ஒப்பந்தம் பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஆனால் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைவதே நல்லது என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். பாரத பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் தலைவர்கள் இதனை புரிந்துகொள்வார்கள் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-அக்-202101:12:25 IST Report Abuse
தமிழவேல் பிரச்சனையே வேற.... ஆஸ்திரேலியா பிரான்சிடம்2014 இல் ஆரம்பித்து, 2016 இல் 12 நீர்முழுகி கப்பலுக்கு 56 பில்லியன் யூரோவிற்கு (ரூபாய்க்கு 87 ஆல் பெருக்கிக்கொள்ளவும்) ஒப்பந்தம் கையெழுத்திட்டது. ஆனால், இப்போது அந்த ஒப்பந்தத்தை ""இன்று"" முறித்துவிட்டு அமெரிக்காவிடம் (அமெரிக்கா, பிரிட்டன்) அணுஆயுத கப்பல்களுக்கு ஒப்பந்தம் இடுகின்றது. 56 பில்லியன் யூரோ பிரஞ்சு ஒப்பந்தம், அந்த நாட்டிற்கு கடந்த நூற்ராண்டில் இதுவே அதிக மதிப்புள்ள ஒப்பந்தமாகும். 2050 வரை பலருக்கு வேலை கொண்டுவரும் ஒப்பந்தம். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா முன் அறிவிப்பு கூட இல்லாமல் சதி செய்ததாக பேசப்படுகின்றது. மற்றோன்று, தெற்காசிய பகுதி பாதுகாப்பிற்கு குவாட் நாடுகள் உள்ளபோது, இப்போது எதற்கு ""தனியாக"" அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மூவரும் ஆக்கஸ் என்ற அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் ? மூவரும் குவாட் அமைப்பைக் கழற்றி விடுகின்றார்களா ?
Rate this:
Cancel
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
30-செப்-202122:14:21 IST Report Abuse
Gokul Krishnan அமெரிக்கா விட்ட வாய்வு தான் ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துவுக்கும் மணக்கும்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
30-செப்-202122:11:05 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பல டீம்கா கொத்தடிமைஸ் பார்க்கிற மாதிரி இதுல மோடிக்கு அல்லது இந்தியாவுக்கு அவமானத்தை நான் பார்க்கவில்லை அமெரிக்க-ஆஸ்திரேலிய யாவாரம் இதில் பிரதானம் இந்தியா ஆயுத தளவாடங்கள் / பீரங்கிகள் / போர் விமானங்கள் இவற்றை வாங்குறதை குறைச்சுக்கிட்டு சொந்தமா உற்பத்தி பண்ண முயற்சி எடுக்குறதால அங்கிள் சாம் (அமெரிக்கா) ஒதுக்குவது இயற்கையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X