அமெரிக்கா ஏமாற்று வேலை வட கொரியா கடும் தாக்கு

Added : செப் 30, 2021
Share
Advertisement
சியோல் :அணு ஆயுதம் தொடர்பாக நிபந்தனையற்ற பேச்சுக்கு அழைப்பு விடுப்பதாக கூறி, உலக நாடுகளை அமெரிக்கா ஏமாற்றி வருவதாக, வட கொரியா குற்றஞ்சாட்டி உள்ளது. வட கொரியாவின் பார்லிமென்டில், அந்த நாட்டு அதிபர் கிம் ஜங் உன் பேசியதாவது:தென் கொரியாவுடன் சமரச பேச்சு நடத்த தயாராக உள்ளோம். இதற்காக இரு நாடுகளின் தொலைத்தொடர்பு வசதியை மீண்டும் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தென்
 அமெரிக்கா ஏமாற்று வேலை வட கொரியா கடும் தாக்கு

சியோல் :அணு ஆயுதம் தொடர்பாக நிபந்தனையற்ற பேச்சுக்கு அழைப்பு விடுப்பதாக கூறி, உலக நாடுகளை அமெரிக்கா ஏமாற்றி வருவதாக, வட கொரியா குற்றஞ்சாட்டி உள்ளது.
வட கொரியாவின் பார்லிமென்டில், அந்த நாட்டு அதிபர் கிம் ஜங் உன் பேசியதாவது:

தென் கொரியாவுடன் சமரச பேச்சு நடத்த தயாராக உள்ளோம். இதற்காக இரு நாடுகளின் தொலைத்தொடர்பு வசதியை மீண்டும் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் தென் கொரியா, அமெரிக்காவின் தயவை நாடி வருகிறது. உலக நாடுகளிடம் ஆதரவு கேட்டு கெஞ்சுகிறது. இதுபோன்ற இரட்டைக் கொள்கையை உதறி விட்டு, நம் பிரச்னையை நாமே பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என, தென் கொரியாவுக்கு அழைப்பு விடுக்கிறேன். அமெரிக்கா தந்திரமாக நிபந்தனையற்ற பேச்சு நடத்த தயார் எனக் கூறி உலக நாடுகளை ஏமாற்றி வருகிறது.


latest tamil news



ஆனால், நம் மீது தொடர்ந்து விரோத போக்கை கடைப்பிடித்துவருகிறது. ராணுவ அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா கைவிடவில்லை. தென் கொரியாவுடன் இணைந்து ராணுவ பயிற்சி நடத்துகிறது. அமெரிக்காவில் எந்த அரசு வந்தாலும், வட கொரியா மீதான விரோத போக்கும், ராணுவ அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. இத்தகைய போக்கை அமெரிக்கா கைவிடாதவரை அணு ஆயுத பாதுகாப்பை அதிகரிப்போம். அணு ஆயுத தடை ஒப்பந்தம் பற்றிய பேச்சை தொடர மாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X