பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை: 27 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உத்தரவின்படி அரசு அலுவலகங்களில் திடீர் என அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ. 27 லட்சம் வரையில் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு , வட்டார போக்குவரத்து அலுவலகம் ( ஆர்.டி.ஓ.,), டாஸ்மாக் மின்சார வாரியம், பஞ்.,

சென்னை: தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உத்தரவின்படி அரசு அலுவலகங்களில் திடீர் என அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ. 27 லட்சம் வரையில் பறிமுதல் செய்யப்பட்டது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு , வட்டார போக்குவரத்து அலுவலகம் ( ஆர்.டி.ஓ.,), டாஸ்மாக் மின்சார வாரியம், பஞ்., அலுவலகங்கள் , ஊரகவளர்ச்சித்துறை,தாலுகா அலுவலகம், ஆகியவற்றில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை உத்தரவின்படி திடீர் என அதிரடி சோதனை நடத்தப்பட்டது.


latest tamil news



கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் , சிவகங்கை, விருதுநகர் , மதுரை தேனி திண்டுக்கல் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், சென்னையில் அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர், தாம்பரம், திருவான்மியூர் உள்ளிட்ட ஆறு இடங்கள் , மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ,திருவண்ணாமலை, சேலம், நாமக்கல்,ஈரோடு, திருப்பூர், கோவை, உட்பட 38 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணமாக ரூ. 26 லட்சத்து 99 ஆயிரத்து 335 பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌடில்யன் - Chennai ,இந்தியா
01-அக்-202106:38:40 IST Report Abuse
கௌடில்யன் பாஸ்போர்ட் அலுவலகங்கள் மாதிரி TCS போன்ற நிறுவனங்களிடம் இந்த பணியை ஒப்படைக்கலாம் ..
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-செப்-202123:20:34 IST Report Abuse
தமிழவேல் அதே இடத்தில நாளைக்கே திரும்பப் போனாலும் அறுவடை பண்ணலாம்.. திருந்த மாட்டானுவோ...
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-செப்-202122:38:24 IST Report Abuse
Kasimani Baskaran அவர்கள் டிபன் சாப்பிட வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டால் பாவம் சாப்பிட என்ன செய்வார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X