எலக்ட்ரானிக்சிட்டியில் இருவர் பலி ஓட்டுனருக்கு ஜாமின்

Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு:எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தி இருவரின் இறப்புக்கு காரணமான கார் ஓட்டுனர் நிதினுக்கு ஜாமின் கிடைத்துள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக்சிட்டி மேம்பாலத்தில் செப்டம்பர் 14ல், இரவு 9:20 மணிக்கு நின்றிருந்த 'புல்லட்' பைக் மீது, வேகமாக வந்த கார் மோதியது. இதில் பைக் பாலத்திலிருந்து பறந்து விழுந்ததில் சென்னையின் பிரித்தம் குமார், 30,

பெங்களூரு:எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தி இருவரின் இறப்புக்கு காரணமான கார் ஓட்டுனர் நிதினுக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

பெங்களூரு எலக்ட்ரானிக்சிட்டி மேம்பாலத்தில் செப்டம்பர் 14ல், இரவு 9:20 மணிக்கு நின்றிருந்த 'புல்லட்' பைக் மீது, வேகமாக வந்த கார் மோதியது. இதில் பைக் பாலத்திலிருந்து பறந்து விழுந்ததில் சென்னையின் பிரித்தம் குமார், 30, கிருத்திகாராமன், 28, உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் நிதினுக்குமுதுகெலும்பு முறிந்துஉள்ளது. கால், மார்பு,இடுப்பிலும் காயமடைந்துஉள்ளார். நடமாட முடியாதநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அவருக்கு ஜாமின் கிடைத்து உள்ளது. இவர் பொம்மசந்திரா திருப்பாளையாவில் வசிக்கிறார். பி.எம்.எஸ்., கல்லுாரியில் பொறியியல் பட்டப்படிப்பு படிப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

பெங்களூரு போக்குவரத்துப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா கூறியதாவது:அதி வேகமாக காரை ஓட்டி, இரு அப்பாவிகளின் உயிரை பலி வாங்கிய நிதின், கிரிக்கெட் விளையாடி விட்டு வீடு திரும்பும் போது, விபத்து நடந்துள்ளது. இவர் உடற் சோர்வால் தன்னை மறந்து பைக் மீது மோதினாரா; குடிபோதையில் இருந்தாரா என்பது பற்றி விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
02-அக்-202108:16:17 IST Report Abuse
jayvee ஆடி கார் ஓட்டியது வேலைக்கு போகாத சிறுவன் என்றால், இது வரை அவன் குடித்துவிட்டு வண்டி ஓட்டினான என்று நிரூபிக்க முடியாத (யாஷிகாஆனந்த் வழக்கைபோல) போலீசுக்கு எவ்வளவு வருமானம் இருக்கும் இந்த வழக்கில் ..இறந்தவர்கள் இருவரும் தமிழர்கள் என்பதால் இந்த அலட்சியமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X