நிகில், பிரஜ்வல் தலைமையில் தேர்தல்மாஜி முதல்வர் குமாரசாமி அறிவிப்பு| Dinamalar

நிகில், பிரஜ்வல் தலைமையில் தேர்தல்'மாஜி' முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

Added : செப் 30, 2021
Share
ராம்நகர்:''இளைஞர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளோம். கட்சியின் இளம் தலைவர்கள் நிகில், பிரஜ்வல் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். ராம்நகரில், அவர் கூறியதாவது:இளைஞர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறோம். பண அரசியலை சமாளித்து உறுதியாக நிற்க வேண்டும். மக்களிடம் சென்று அவர்களின்

ராம்நகர்:''இளைஞர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளோம். கட்சியின் இளம் தலைவர்கள் நிகில், பிரஜ்வல் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்,'' என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
ராம்நகரில், அவர் கூறியதாவது:இளைஞர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறோம். பண அரசியலை சமாளித்து உறுதியாக நிற்க வேண்டும். மக்களிடம் சென்று அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். எங்கள் கட்சியின் இளம் தலைவர்கள் நிகில், பிரஜ்வல் தலைமையில், இளம் தலைமுறையினரை ஒருங்கிணைத்து தேர்தலை எதிர்க்கொள்வோம்.


திண்டாட்டம்

மாநில பா.ஜ., அரசு, தன் தவறான கொள்கைகளில் மூழ்கி அபிவிருத்தி, வேலை வாய்ப்பை உருவாக்குவதை மறந்துள்ளது. மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம், தாண்டவம் ஆடுகிறது. கூட்டணி அரசின் ஆட்சி காலத்தில் நான் செயல்படுத்திய வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டங்களை அரசு அலட்சியப்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன் வேலை வாய்ப்பை உருவாக்குவதாக பா.ஜ., கூறியது.

ஆனால் உழைக்கும் கைகளுக்கு வேலை கொடுக்கவில்லை.9 மாவட்டங்களில் தொழிற்சாலை கட்ட என் தலைமையிலான அரசு முடிவு செய்திருந்தது. இத்திட்டத்தை பா.ஜ., அரசு கவனிக்க வில்லை. பா.ஜ.,வுக்கு ஹிந்து நாடாக்க வேண்டும் என்பது முக்கிய குறிக்கோள். இதற்காக இளைஞர்களை திசை மாற்றுகிறது.

இளைஞர்கள், பெண்கள் யாரையும் சாராமல், வாழ்க்கை நடத்த வேண்டும். இதற்கான வாய்ப்பை அரசு ஏற்படுத்தவில்லை. ஒவ்வொரு குடும்பத்தின் இளைஞர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை நீக்குவது ம.ஜ.த., நோக்கமாகும். முதலில் அனைவருக்கும் வேலை, வாழ்க்கை கிடைக்கட்டும். அதன்பின் ஹிந்து நாடாக்குவது பற்றி ஆலோசிக்கலாம்.

ம.ஜ.த.,வின், நான்காவது நாள் கருத்தரங்கில் 300 பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தோம். இன்று மிக அதிகமானோர் சேர்ந்துள்ளனர். 2023ல் இலக்கு என்ன என்பதை, இளம் தலைமுறையினருக்கு விவரிப்பதே கருத்தரங்கின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X