கலக்கத்தில் காவி!| Dinamalar

கலக்கத்தில் காவி!

Added : செப் 30, 2021
Share
கலக்கத்தில் காவி!பகல் அரசியலுக்கே மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள், அதிருப்தி அரசல் புரசலாக இருந்து வருது. இதிலே பெலகாவியில் அசம்பிளி மேடம், 'இரவு பாலிடிக்ஸ்' நடத்துகிறார்னு பெலகாவியின் 'மாஜி' காவி அசம்பிளிக்காரர் சர்ச்சைக்குரிய வார்த்தையை தெளித்து விட்டாராம்.பெண்ணின் சேவையை கொச்சைப்படுத்தி இருப்பதாக, கை காரர்கள் கொதித்துள்ளாங்க. குற்றமாக எதிர்ப்பை காட்டி

கலக்கத்தில் காவி!

பகல் அரசியலுக்கே மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள், அதிருப்தி அரசல் புரசலாக இருந்து வருது. இதிலே பெலகாவியில் அசம்பிளி மேடம், 'இரவு பாலிடிக்ஸ்' நடத்துகிறார்னு பெலகாவியின் 'மாஜி' காவி அசம்பிளிக்காரர் சர்ச்சைக்குரிய வார்த்தையை தெளித்து விட்டாராம்.பெண்ணின் சேவையை கொச்சைப்படுத்தி இருப்பதாக, கை காரர்கள் கொதித்துள்ளாங்க. குற்றமாக எதிர்ப்பை காட்டி வராங்க. இதனால் காவிக்கு பாதிப்பு உண்டாகி இருக்குதாம்.

பெருசு கீழே, சிறுசு மேலே!

பிடதி பண்ணையில் விவசாய கட்சியின் பயிலரங்கம் நிகழ்ச்சி 4 நாட்களாக நடந்தது. இதில் பல மாவட்ட கட்சி நிர்வாகிகள் வந்து பங்கேற்றாங்க. 'மாஜி' பிரதமரோட மூத்த மகன், எம்.பி.,யான பேரன், கீழ் வரிசையில் தொண்டர்களை போல இருந்தாங்க. ஆனால், இளைய மகனான 'மாஜி' சி.எம்., மற்றும் அவரோட எம்.எல்.ஏ.,வான மனைவி மேடையில் இருந்தாங்க. மூத்தவர் கீழே, இளையவர் மேலே இருந்ததை கவனித்தவங்க, எல்லாம் தலை கீழாக நடக்குதே, சின்னவருக்கு தான் இங்கு அதிகாரம் எல்லாமேன்னு உறவுக்காரங்க பேசிக்கிட்டாங்க.

வாய் நீளும் பேச்சு!

'தலிபான்' என மாஜி கைக்கார 'மாஜி' முதல்வர் கூறின வார்த்தைகள் அவருக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பூக்கார 'மாஜி' கல்வி அமைச்சரான ராஜாஜி நகர் அசம்பிளிக்காரர், 'வார்த்தையை அளந்து பேசணும்'னு அறிவுரை கூறினார். மாநில பூக்காரரோ, இவரோட ஆட்சியில் காவிக் காரர்கள் இறந்த பட்டியலை கூறினார்.காவிக் காரங்க வரிசையில் நின்ற படி தலிபானுக்கு புது புது அர்த்தங்களை சொல்லி வர்ராங்க. 'மாஜி' முதல்வருக்கு, வாய் நீளுவதை கட்டுப்படுத்த வேணும்னு ஆளுக்கு ஆளு அசைபோடுறாங்க.

ஒதுக்குவதே நல்லது!

குழப்பவாதிகளை ஒதுக்கணுமாம் அண்மையில் ராஜினாமா செய்த துமகூரு மாவட்ட பூக்கார தலைவரும், சிந்தி தொகுதியில் 'சீட்' கேட்கும் பூக்கார பிரமுகரும் எடிஜி.,யை ஒண்ணா போய் சந்திச்சாங்க.இது காவிக் கொடி வட்டாரத்தில் பல சந்தேகங்களை எழுப்பி இருக்கு. உட்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிற வேலையாக இருக்குதுன்னு சொல்றாங்க. எடிஜி., பிளவுப்படுத்துறவங்கள ஒதுக்கி வைக்கணுமே, தவிர, அவரு முக்கியத்துவம் தரலாமான்னு மல்லேஸ்வரம் ஹெட் ஆபிசில் பேசிக்கிறாங்க!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X