'பேஸ்ட்' வடிவில் தங்கம் கடத்தல்

Added : செப் 30, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பெங்களூரு:தங்கத்தை பற்பசை வடிவில் மாற்றி சட்ட விரோதமாக கடத்தி வந்ததை பெங்களூரு சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். துபாயிலிருந்து, இண்டிகோ விமானம், நேற்று காலை, பெங்களூரு தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. விமானத்திலிருந்து, அனைத்து பயணியரும் வெளியேறிய பின், சுங்க அதிகாரிகள், விமானம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது

பெங்களூரு:தங்கத்தை பற்பசை வடிவில் மாற்றி சட்ட விரோதமாக கடத்தி வந்ததை பெங்களூரு சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

துபாயிலிருந்து, இண்டிகோ விமானம், நேற்று காலை, பெங்களூரு தேவனஹள்ளி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. விமானத்திலிருந்து, அனைத்து பயணியரும் வெளியேறிய பின், சுங்க அதிகாரிகள், விமானம் முழுவதும் சோதனையிட்டனர். அப்போது பொட்டலம் கிடைத்தது. இதை பிரித்து பார்த்த போது, 29 தங்கக்குச்சிகள், பேஸ்ட் வடிவிலிருந்த தங்கம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதை எடை போட்டு பார்த்த போது, தங்கக்குச்சிகள் அரை கிலோ, தங்க பேஸ்ட் 701 கிராம் இருந்தது. இவற்றின் மதிப்பு 61 லட்சம் ரூபாய். இதை துபாயிலிருந்து கடத்தி வந்த பயணி, விமான நிலையத்திலிருந்து தப்பி விட்டார்.அவர்களை கண்டுபிடிக்க பயணியர் பட்டியலை ஆய்வு செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
01-அக்-202117:52:23 IST Report Abuse
JeevaKiran சந்தேகத்தின் பெயரில் ஒரு சிலரை சோதனை செய்யும் போதே இத்தனை கடத்தல் பொருள் பிடிபடுகிறது என்றால், எல்லோரையும் சோதனை செய்தால் இன்னும் எவ்வளவோ கிடைக்கும்.
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
01-அக்-202117:49:57 IST Report Abuse
JeevaKiran ஒரு சின்ன சந்தேகம். பயணிகள் விமானத்தில் ஏறும்போது சோதனை செய்ய மாட்டார்களா? இல்லையென்றால், துபாய் கடத்தலுக்கு ஊக்கப்படுத்துகிறதா? பின் ஏன் அங்கு சோதனை நடைபெறுவதில்லை?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-அக்-202123:34:38 IST Report Abuse
தமிழவேல் கொண்டு செல்வதற்கு, அங்கே வாங்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், செய்திகள்படி பல முறை விமானத்திலேயே விட்டுவிட்டு இறங்கி விடுகின்றனர். விமானத்தை சுத்தம் செய்ய வரும் கும்பலுக்கும் இதற்கும் சிறிய தொடர்பு இருக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X