வெங்காய வியாபாரி மாயம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
பெங்களூரு:வெங்காய வியாபாரி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பெங்களூரின் பசவேஸ்வரநகரில் வசிக்கும் சீனிவாஸ், வெங்காய வியாபாரம் செய்கிறார். யஷ்வந்த்பூர் மார்க்கெட்டில் இவரது கடை உள்ளது. சில நாட்களுக்கு முன், மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறி, காரில் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இவரது மொபைலும், கார்

பெங்களூரு:வெங்காய வியாபாரி மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பெங்களூரின் பசவேஸ்வரநகரில் வசிக்கும் சீனிவாஸ், வெங்காய வியாபாரம் செய்கிறார். யஷ்வந்த்பூர் மார்க்கெட்டில் இவரது கடை உள்ளது. சில நாட்களுக்கு முன், மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறி, காரில் சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இவரது மொபைலும், கார் ஓட்டுனர் மொபைலும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது.

வியாபாரி குடும்பத்தினர், பசவேஸ்வர நகர் போலீஸ் நிலையத்தில், புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், கார் ஓட்டுனரை கண்டுப்பிடித்தனர்.சீனிவாசை பற்றி கேட்ட போது, அவரை வருமான வரித்துறை அதிகாரிகள், விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக கூறினார். இது உண்மையா அல்லது யாராவது அவரை கடத்தியுள்ளனரா என்பது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X