பொது செய்தி

இந்தியா

அரபிக்கடலில் புதிய புயல்? வானிலை மையம் தகவல்!

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஆமதாபாத்:'குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கட்ச் வளைகுடாவுக்கு நகர்ந்ததால் அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது' என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தற்போது நிலவி வரும் வானிலை காரணமாக குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இம்மாநிலத்தின் கடலோர

ஆமதாபாத்:'குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கட்ச் வளைகுடாவுக்கு நகர்ந்ததால் அரபிக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது' என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தற்போது நிலவி வரும் வானிலை காரணமாக குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இம்மாநிலத்தின் கடலோர பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும். குஜராத்தின் தெற்கு மற்றும் அதையொட்டிய கம்பத் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கட்ச் வளைகுடா பகுதியில் நேற்று நிலைகொண்டது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து வட கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும்.இதனால் குஜராத்மாநிலத்தின் கடலோரப் பகுதிகளான ஜாம் நகர், போர்பந்தர், துவாரகா மற்றும் கட்ச் பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X