'போக்சோ' சட்ட வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுடில்லி:'உடலோடு உடல் நேரடி தொடர்பு இல்லாத பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில், குற்றவாளி மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது' என்ற மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மனு மீது விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 39 வயது நபர், தன் வீட்டருகே வசித்த சிறுமியிடம் பாலியல்

புதுடில்லி:'உடலோடு உடல் நேரடி தொடர்பு இல்லாத பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில், குற்றவாளி மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது' என்ற மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மனு மீது விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 39 வயது நபர், தன் வீட்டருகே வசித்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமியின் ஆடைகளை களையாமல் உடல் பாகங்களை அந்த நபர் அத்துமீறி தொட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் அவர் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், 'பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவரின் உடல், பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலோடு நேரடியாக உரசாதபட்சத்தில், அதை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது. 'எனவே, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது' என தீர்ப்பளித்து அவரை விடுவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மற்றும் தேசிய பெண்கள் கமிஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.பல்வேறு கட்டங்களாக நடந்த விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இருதரப்பினரும் தங்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, தீர்ப்பை ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X