சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சொந்த வீடு சந்தோஷ வீடாக மாற...

Added : செப் 30, 2021
Share
Advertisement
வீட்டுக் கடனை முடிக்கும் போது கவனிக்க வேண்டியவை குறித்து கூறும், நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம்: நம்மவர்களின் மிகப்பெரிய சொத்தாக இருக்கிறது, வீடு; அதேபோல, நம்மவர்களின் மிகப்பெரிய கடனாக வீட்டுக் கடன் இருக்கிறது. வீட்டுக் கடன் முடியப் போகிறது என்றாலே ஓர் இனம் புரியாத சந்தோஷம் வந்து விடுகிறது. வீட்டுக் கடன் வாங்கும் போது, 'ஒரிஜினல்' ஆவணங்கள், நகல்கள் என 15 - 20 ஆவணங்களை வங்கி
சொல்கிறார்கள்

வீட்டுக் கடனை முடிக்கும் போது கவனிக்க வேண்டியவை குறித்து கூறும், நிதி ஆலோசகர் கா.ராமலிங்கம்: நம்மவர்களின் மிகப்பெரிய சொத்தாக இருக்கிறது, வீடு; அதேபோல, நம்மவர்களின் மிகப்பெரிய கடனாக வீட்டுக் கடன் இருக்கிறது. வீட்டுக் கடன் முடியப் போகிறது என்றாலே ஓர் இனம் புரியாத சந்தோஷம் வந்து விடுகிறது. வீட்டுக் கடன் வாங்கும் போது, 'ஒரிஜினல்' ஆவணங்கள், நகல்கள் என 15 - 20 ஆவணங்களை வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் கொடுத்திருப்போம். ஆவணங்கள் தரும்போது, நகல்களை எல்லாம் பிரதி எடுத்து வைத்து கொள்வது நல்லது. எது ஒரிஜினல், எது நகல் எனக் குறித்து வைத்துக் கொண்டால் கடனை முடிக்கும்போது சரி பார்த்து வாங்க வசதியாக இருக்கும்; ஆவணமும் தவற வாய்ப்பிருக்காது.சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், ஆவணங்களை 'கூரியர்' வாயிலாக அனுப்பலாமா எனக் கேட்பர். ஒருபோதும் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டாம்.முக்கிய ஆவணங்கள் சேதம் அடையவும், பக்கங்கள் தவறவும் வாய்ப்புள்ளது என்பதால், நேரில் சென்று பெறுவதே நல்லது.கடனை முழுமையாக அடைத்த பின், என்.ஓ.சி., - 'ஆட்சேபனை இல்லை' என்ற சான்றிதழை, வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.உங்கள் சொத்தின் மீது கடன் தந்தவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதற்கான ஆதாரமாகவும் இந்த சான்றிதழ் இருக்கும். இது சட்டப்படியான, மிக முக்கியமான ஆவணம்.வீட்டுக் கடன் வாங்கிய விபரம், ஓர் ஆவணமாக, சார் - பதிவாளர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகளால் பதிவு செய்யப்படும். இதற்கான கட்டணங்களைக் கடன் வாங்குபவர் செலுத்த வேண்டும்.கடன் முழுமையாக முடிந்த பின், வங்கி அதிகாரி ஒருவர், சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, 'கடன் முழுமையாக அடைக்கப்பட்டு விட்டது' என, ஆவணம் வாயிலாக உறுதி அளித்தால், அந்தச் சொத்து மீதான அடமானம் நீக்கப்படும். இல்லையெனில், அந்தச் சொத்து அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது என, வில்லங்கச் சான்றிதழில் காட்டும்.எனவே, சார் - பதிவாளர் அலுவலகத்தில் அடமானம் நீக்கப்பட்ட சில மாதம் கழித்து, புதிதாக வில்லங்கம் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.வீட்டுக் கடன் முழுமையாக முடிந்த பின், 'சிபில்' போன்ற கடன் தகவலை நிறுவனத்துக்கு வங்கி தெரிவிக்கும். அந்த விபரம் 'கிரெடிட் ரிப்போர்ட்'டில் மாற்றப்பட வேண்டும். மாற்றப்படவில்லை என்றால் நீங்கள் வீட்டுக் கடனை கட்டி வருவதாகவே காட்டும். இதனால், அடுத்த கடன் வாங்க முடியாது. சொந்த வீடு, சந்தோஷ வீடாக மாற மேற்கண்ட விஷயங்களைக் கட்டாயம் செய்ய வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X