மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி :பிரதமர் மோடி திட்டவட்டம்

Updated : அக் 02, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (20+ 13)
Share
Advertisement
ஜெய்ப்பூர்: ''நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு மருத்துவ கல்லுாரி இருக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 'பெட்ரோ கெமிக்கல்'இங்குள்ள மாவட்டங்களில் அமைய உள்ள மருத்துவ கல்லுாரிகளுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக
மாவட்டம், ஒரு மருத்துவ கல்லுாரி , மோடி திட்டவட்டம்

ஜெய்ப்பூர்: ''நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு மருத்துவ கல்லுாரி இருக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.


'பெட்ரோ கெமிக்கல்'இங்குள்ள மாவட்டங்களில் அமைய உள்ள மருத்துவ கல்லுாரிகளுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். 'பெட்ரோ கெமிக்கல்' தொழில்நுட்ப மையத்தையும் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உலக நாடுகளுக்கு கொரோனா பெருந்தொற்று பல்வேறு பாடங்களை கற்று கொடுத்துள்ளது. ஒவ்வொரு நாடும், தங்கள் சொந்த வழியில் இந்தப் பிரச்னையை சமாளித்து வருகின்றன. இந்தியாவில் 88 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி 'டோஸ்' போடப்பட்டு உள்ளது.

இந்திய சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய தேசிய சுகாதார கொள்கையை உருவாக்கி வருகிறோம். 'துாய்மை இந்தியா', 'ஆயுஷ்மான் பாரத்' ஆகிய திட்டங்கள் இதன் ஒரு அங்கம். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும்சுகாதார சேவை கிடைக்க செய்ய உதவும். சிறந்த மருத்துவமனைகள், ஆய்வகங்கள், மருந்து கடைகள் ஆகியவற்றை ஒரே நொடியில் அறிய முடியும். நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.நாட்டில் மருத்துவ கல்விக்கும், மருத்துவ சேவைகளுக்கும் இருந்த இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
1.4 லட்சம்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் 170 மருத்துவக் கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 100 மருத்துவக் கல்லுாரிகள் திறப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மருத்துவக் கல்லுாரி அல்லது முதுநிலை மருத்துவக் கல்லுாரி இருக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் விருப்பம். இதற்கான பணிகளை அரசு செய்து வருகிறது.

நாட்டில், 2014ல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் 82 ஆயிரமாக தான் இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 1.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுதும் 22 எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் துவக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியை ஆங்கிலத்தில் படிப்பது ஒரு தடையாகவே, கிராமப்புற மாணவர்களுக்கு இருந்தது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, தாய் மொழியில் உயர் கல்விகளை கற்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ கல்வி கற்க வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதனால் தான், மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முற்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


பரஸ்பர நம்பிக்கையே ஜனநாயகத்தின் வலிமைமருத்துவக் கல்லுாரி நிகழ்ச்சியில் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ''மாநிலத்தின் வளர்ச்சிக்கு சில திட்டங்களை துவக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்,'' என, கோரிக்கைவிடுத்தார்.இதற்கு பதில் அளித்து பிரதமர் பேசியதாவது:கொள்கைகளில், சிந்தனைகளில் வேறுபாடுகள் இருந்தாலும், பரஸ்பர நம்பிக்கை தான் ஜனநாயகத்தின் வலிமை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தும், என் மீது ராஜஸ்தான் முதல்வர்
வைத்துள்ள நம்பிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ராஜஸ்தான் வளர்ச்சிக்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (20+ 13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202118:07:58 IST Report Abuse
அப்புசாமி இப்போ மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி... சீக்கிரமே வீட்டுக்கு ஒரு டாக்டர். அதுக்கப்புறம் எல்லோருக்கும் கட்டாய மருத்துவப் படிப்பு.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
01-அக்-202117:33:39 IST Report Abuse
DVRR ஐய்யயோ அப்போ இந்த மடியல் அரசு உடனே டாஸ்மாக்கினாட்டை 135 மாவட்டம் ஆக்கிவிடும்
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
01-அக்-202116:33:54 IST Report Abuse
Raj நவோதயா பள்ளிகளே எங்கள் ஊரில் உடமாட்டோம், உங்க மருத்துவ கல்லூரிகளை உட்டுடுவோமா? மத்த மாநிலத்தில பண்ணுங்க. நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X