பொது செய்தி

தமிழ்நாடு

செம்மொழி நிறுவனத்தில் 20 நூல்கள் வெளியீடு

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 20 நுால்கள் வெளியிடப்பட உள்ளன.சென்னை தரமணியில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் படைப்புகளை நுாலாக வெளியிட்டு வருகிறது. அந்த நுால்களில் உள்ள கருத்துகளை ஆய்வு செய்தும் வெளியிடுகிறது. அந்த வகையில், இந்த மாதம் வெளியிடும் வகையில் 20 நுால்கள் தயாராக உள்ளன.இது குறித்து,

சென்னை:சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 20 நுால்கள் வெளியிடப்பட உள்ளன.

சென்னை தரமணியில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் படைப்புகளை நுாலாக வெளியிட்டு வருகிறது. அந்த நுால்களில் உள்ள கருத்துகளை ஆய்வு செய்தும் வெளியிடுகிறது. அந்த வகையில், இந்த மாதம் வெளியிடும் வகையில் 20 நுால்கள் தயாராக உள்ளன.

இது குறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது:செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஒவ்வொரு மாதமும் ஐந்து நுால்களையாவது வெளியிட வேண்டும் என்ற இலக்குடன் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

இதில், பழந்தமிழ் நுால்களை பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்த்து வெளியிடும் திட்டம் பிரதானமாக செயல்படுத்தப்படுகிறது. மேலும், குறுந்திட்ட ஆய்வுகளின் வாயிலாகவும் நுால்களை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இந்த மாதம் 20 நுால்களை வெளியிடும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X