பொது செய்தி

தமிழ்நாடு

அகழாய்வு பணிகள் தமிழகத்தில் நிறைவு

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக தொல்லியல் துறை சார்பில், ஏழு இடங்களில் நடந்த அகழாய்வு பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன.தமிழகத்தில் 2021ல், ஏழு இடங்களில் அகழாய்வு செய்வதற்கான உரிமத்தை, மத்திய தொல்லியல் ஆலோசனை குழு, தமிழக தொல்லியல் துறைக்கு வழங்கியது. ஜனவரி முதல், செப்., வரை மட்டுமே இந்த உரிமம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று வரை சிவகங்கை மாவட்டத்தில், சங்க கால வாழ்விடம் உள்ள கீழடியிலும்,

சென்னை:தமிழக தொல்லியல் துறை சார்பில், ஏழு இடங்களில் நடந்த அகழாய்வு பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன.

தமிழகத்தில் 2021ல், ஏழு இடங்களில் அகழாய்வு செய்வதற்கான உரிமத்தை, மத்திய தொல்லியல் ஆலோசனை குழு, தமிழக தொல்லியல் துறைக்கு வழங்கியது. ஜனவரி முதல், செப்., வரை மட்டுமே இந்த உரிமம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று வரை சிவகங்கை மாவட்டத்தில், சங்க கால வாழ்விடம் உள்ள கீழடியிலும், அதைச் சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலுார் ஆகியவற்றிலும் ஒரு தொகுப்பாக அகழாய்வு செய்யப்பட்டது.

அதேபோல துாத்துக்குடி மாவட்டத்தில், சங்க காலத்தைச் சேர்ந்த மிகப் பரந்த ஈமக்காடான ஆதிச்சநல்லுார்; பாண்டியர்களின் துறைமுகமான கொற்கை; ராஜேந்திர சோழனின் அரண்மனை உள்ள, அரியலுார் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம்; பழங்கால வர்த்தக நகரமான கொடுமணல். சங்க காலத்துக்கு முற்பட்டோரை புதைத்த கற்திட்டைகள் அதிகம் உள்ள மயிலாடும்பாறை ஆகிய ஏழு இடங்களில் நேற்று வரை அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடந்தன.

இவற்றில், ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அங்கு கிடைத்த கரிமப் பொருட்கள், கால கணிப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அகழாய்வு பணிகள் நிறைவடைந்தாலும், தொல்பொருட்களை வகைப் பிரித்தல், பதிவு செய்தல், படம் எடுத்து ஆவணப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் இந்த அகழாய்வுகள் குறித்த, முக்கியத்துவம் வாய்ந்த இடைக்கால அறிக்கைகள் வெளியாக உள்ளன.

மேலும், அடுத்தாண்டு ஜன., முதல், மேலும் பல புதிய இடங்களிலும், ஏற்கனவே நடந்த அகழாய்வு இடங்களிலும் அடுத்த கட்ட பணிகள் துவங்கும் வகையில், மத்திய தொல்லியல் ஆலோசனை குழுவின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X