ஐகோர்ட் நீதிபதியாக 16 பேர் பரிந்துரை

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுடில்லி:உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்கும்படி, 16 பேரின் பெயர்களை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரமணா பொறுப்பேற்றதில் இருந்து, நீதிபதிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தலைமையிலான கொலீஜியம், நீதிபதிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான பரிந்துரைகளை, மத்திய அரசிடம்

புதுடில்லி:உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்கும்படி, 16 பேரின் பெயர்களை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரமணா பொறுப்பேற்றதில் இருந்து, நீதிபதிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தலைமையிலான கொலீஜியம், நீதிபதிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான பரிந்துரைகளை, மத்திய அரசிடம் முன்வைத்து வருகிறது.

மும்பை, குஜராத், ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில், நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க, 16 பேரின் பெயர்களை கொலீஜியம் நேற்று முன்தினம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.அதன்படி இந்த நான்கு உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்க, ஆறு நீதித் துறை அதிகாரிகள் மற்றும் 10 வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X