பஞ்சாபில் தரமான சிகிச்சை அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

Updated : அக் 02, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
லுாதியானா:“பஞ்சாப் மாநிலத்தில் எங்கள் கட்சி ஆட்சி அமைத்தால் அரசு மருத்துவமனை களில், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக தரமான சிகிச்சை வழங்கப்படும்,” என, டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த அண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல்
பஞ்சாப், தரமான சிகிச்சை அரவிந்த் , கெஜ்ரிவால் உறுதி

லுாதியானா:“பஞ்சாப் மாநிலத்தில் எங்கள் கட்சி ஆட்சி அமைத்தால் அரசு மருத்துவமனை களில், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக தரமான சிகிச்சை வழங்கப்படும்,” என, டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த அண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு இந்த முறை ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மி துடிக்கிறது. இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் மாநிலத்துக்கு வந்துள்ள, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்போம். அரசு மருத்துவமனைகள் தற்போது மிகவும் மோசமாக உள்ளது. மருந்து மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அவசிய தேவையான மருத்துவ உபகரணங்களும் இல்லை. மக்கள் தனியார் மருத்துவமனைகளை செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் அரசு மருத்துவமனைகளின் நிலையை முற்றிலும் மாற்றிஅமைப்போம்.

தனியார் மருத்துவமனைக்கு நிகராக, அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவச, சிறப்பான சிகிச்சை வழங்கப்படும். மருந்து, பரிசோதனை மற்றும் அறுவைச் சிகிச்சை உட்பட அனைத்துமே இலவசம். உதாரணமாக ஒருவருக்கு 10 - 15 லட்சம் ரூபாய் வரையிலான செலவு ஏற்படும் அறுவைச் சிகிச்சையும் கூட அரசு மருத்துவமனையில் இலவசமாகவே செய்யப்படும். பஞ்சாப் மாநில குடிமகன் ஒவ்வொருவருக்கும் மருத்துவ அட்டை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
01-அக்-202117:50:22 IST Report Abuse
DVRR நிச்சயம் தகுந்த சிகிச்சை செய்ய வேண்டும்??முதலில் உனக்கு பிறகு பஞ்சாபி தலைகளுக்கு அப்போ தான் எல்லோருக்கும் இருக்கும் தான் தான் முதல்வர் ஆகணும் என்னும் பித்தம் இறங்கும்???
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
01-அக்-202114:16:17 IST Report Abuse
Vena Suna இவனை பார்த்து தான் இங்கே முதல்வர் பெண்களின் பஸ் பயண இலவசம் ஆரம்பிச்சார்.பஸ்களில் பெண்களை மதிக்கலைன்னா நடத்துனரை அடிங்கன்னு பொறாமைல துரைமுருகன் சொல்றார்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
01-அக்-202112:14:23 IST Report Abuse
elakkumanan டில்லியில் ஆக்ஸிஜன் சிலிண்டர் எல்லாத்தையும் உங்க ஆளுங்களே பிடிச்சு வச்சுக்கிட்டு, மோடி மேல் பழியை போட்டு கொள்ளைப் பேறை காப்பாத்துனீங்களே ....அதேமாதிரியா ....யோவ், நீ ஒரு விஞ்ஞானி ....வடநாட்டு படிச்ச விஞ்ஞானி....படிக்காத எங்க ஊரு விஞ்ஞானியை விட ஆயிரம் மடங்கு டேஞ்சர் ஆன ஆளு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X