பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநிலங்களுக்கு பால் மொத்தமாக விற்க ஆவின் முயற்சி

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை:வெளிமாநிலங்களின் தேவைக்காக, மொத்தமாக பால் விற்பனை செய்யும் முயற்சியில், ஆவின் நிறுவனம் இறங்கியுள்ளது.தமிழகம் முழுதும் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, நாள்தோறும் விவசாயிகளிடம் இருந்து, 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 26 லட்சம் லிட்டர்இதை, பலவகை பால்களாக மாற்றி, ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. நாள்தோறும் 26 லட்சம் லிட்டர்

சென்னை:வெளிமாநிலங்களின் தேவைக்காக, மொத்தமாக பால் விற்பனை செய்யும் முயற்சியில், ஆவின் நிறுவனம் இறங்கியுள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, நாள்தோறும் விவசாயிகளிடம் இருந்து, 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 26 லட்சம் லிட்டர்இதை, பலவகை பால்களாக மாற்றி, ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது. நாள்தோறும் 26 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள பால், வெண்ணெய் மற்றும் பவுடராக மாற்றப்படுகிறது.

கொள்முதலை விட விற்பனை குறைவாக உள்ளதால், ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் சிக்கி உள்ளது. எனவே, நாள்தோறும் ஏற்படும் இழப்பை தவிர்க்க, மொத்தமாக பால் விற்பனை செய்வதற்கான பணிகளில், ஆவின் நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக, தேசிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் வாயிலாக, 'ஆன்லைனில்' பால் வர்த்தகம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

சமீபத்தில், பீஹார் மாநிலத்திற்கு தேவையான பாலை மொத்தமாக வழங்க, ஆவின் நிறுவனம் முயற்சி எடுத்தது. இதற்காக, ஆவின் நிறுவனம் வழங்க முன்வந்த பால் விலையை விட, மற்றொரு நிறுவனம் குறைத்து தருவதாக கூறியது.


மீண்டு விடும்

இதனால், ஆவின் முயற்சி தடைப்பட்டது. இருப்பினும், பால் தேவையுள்ள மற்ற மாநிலங்களுக்கு, அவற்றை மொத்தமாக விற்பனை செய்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. விரைவில், பண்டிகை காலம் துவங்கவுள்ளதால், ஆவின் நிறுவன முயற்சிக்கு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் பாலில் 35 லட்சம் லிட்டரை விற்பனை செய்தால், ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இருந்து மீண்டு விடும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X