பொது செய்தி

தமிழ்நாடு

வாடகை ஒப்பந்தங்கள் பதிவு மக்கள் தயங்குவதால் சிக்கல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை:வாடகை வீட்டுவசதி சட்டத்தில், மூன்று ஆண்டுகளில் 5,500 ஒப்பந்தங்கள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பதிவு செய்ய, மக்கள் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர்.தமிழகத்தில் வாடகை வீட்டுவசதி சட்டம் 2019ல் அமலுக்கு வந்தது. அதன்படி, 90 நாட்களுக்குள் வாடகை ஒப்பந்தங்களை, 'ஆன்லைன்' முறையில் பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்தங்களை பதிவு செய்து அடையாள எண்கள் ஒதுக்கும் பணி, மாவட்ட அளவில்,

சென்னை:வாடகை வீட்டுவசதி சட்டத்தில், மூன்று ஆண்டுகளில் 5,500 ஒப்பந்தங்கள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பதிவு செய்ய, மக்கள் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர்.

தமிழகத்தில் வாடகை வீட்டுவசதி சட்டம் 2019ல் அமலுக்கு வந்தது. அதன்படி, 90 நாட்களுக்குள் வாடகை ஒப்பந்தங்களை, 'ஆன்லைன்' முறையில் பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்தங்களை பதிவு செய்து அடையாள எண்கள் ஒதுக்கும் பணி, மாவட்ட அளவில், கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட அளவில் வாடகை பிரச்னைகளை விசாரிக்க, நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, வீட்டுவசதி துறை அதிகாரிகள் கூறியதாவது:பொது மக்கள் இ - சேவை மையங்கள் வாயிலாக, வாடகை ஒப்பந்த பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆராய்ந்து பதிவு செய்து, தனி எண் ஒதுக்க வேண்டும். மூன்று ஆண்டுகளில் 5,500 பேருக்கு அடையாள எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

3,000க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.பதிவு செய்து அடையாள எண் இருந்தால் மட்டுமே, வீடு வாடகைக்கு விடுபவர்கள், குடியிருப்பவர்கள் தங்களது பிரச்னைகளுக்கு ஆணையம், நீதிமன்றத்தை அணுக முடியும். பதிவு எண் இல்லாவிட்டால், பிரச்னைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காண முடியாது.எனவே, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வீட்டுவசதி துறை முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X