கருணாநிதி தான் நம்பிக்கை துரோகி :துரைமுருகனுக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை

Updated : அக் 02, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை :'நாவடக்கத்துடன் பேச வேண்டும்' என்று அமைச்சர் துரைமுருகனுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அவர்கள் அறிக்கை:திருப்பத்துார் மாவட்டம்ஜோலார்பேட்டை தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன்,அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரை, நம்பிக்கை துரோகி எனக்கூறி இருப்பது,
 கருணாநிதி ,நம்பிக்கை துரோகி  :துரைமுருகன், அ.தி.மு.க., எச்சரிக்கை

சென்னை :'நாவடக்கத்துடன் பேச வேண்டும்' என்று அமைச்சர் துரைமுருகனுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் அறிக்கை:திருப்பத்துார் மாவட்டம்ஜோலார்பேட்டை தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன்,அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரை, நம்பிக்கை துரோகி எனக்கூறி இருப்பது, சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது.


அண்ணாதுரை மறைவுக்கு பின், கருணாநிதியை முதல்வராக்கிய எம்.ஜி.ஆரை, நம்பிக்கை துரோகி என்று துரைமுருகன் சொல்வது, கடும் கண்டனத்திற்குரியது.தி.மு.க., ஆட்சி பீடத்தில் அமரவும், கருணாநிதி முதல்வராகவும் காரணமானவர் எம்.ஜி.ஆர்., தான். கணக்கு கேட்டதற்காக, அவரை கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதி தான் நம்பிக்கை துரோகி.காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கை, சத்தம்போடாமல் திரும்ப பெற்றது, கருணாநிதி செய்த மிகப்பெரிய துரோகம். கச்சத்தீவை தாரை வார்த்தது, மீனவ மக்களுக்கு செய்த துரோகம்.

இலங்கையில் போர் நின்றுவிட்டது எனக்கூறி, கொத்து கொத்தாக கொல்லப்பட காரணமாக இருந்தது, இலங்கை தமிழர்களுக்கு செய்த துரோகம். 'நீட்' தேர்வுக்கு வித்திட்டது ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு செய்த துரோகம். கட்சியே குடும்பம் என்றிருந்த தி.மு.க.,வை, குடும்பமே கட்சி என்று மாற்றியது, தி.மு.க.,வினருக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.இப்படி எண்ணற்ற துரோகங்களை செய்தவர் தான் கருணாநிதி. அவரது மறைவுக்கு பின், அந்தப் பணியை துரைமுருகன் எடுத்துக் கொண்டு இருக்கிறார் போலும்.


தன்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆரை, நம்பிக்கை துரோகி எனக்கூறிய துரைமுருகனின் பேச்சு, நம்பிக்கை துரோகத்தின் உச்சக்கட்டம்.துரைமுருகனின் பேச்சு, அ.தி.மு.க., தொண்டர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இனி வரும் காலங்களில், அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
07-அக்-202119:32:39 IST Report Abuse
M  Ramachandran நீங்கள் என்னதான் உண்மையை சொன்னாலும் அடிமைக்கூட்டம் தீ மு க தலைவர்கள் என்ன சொன்னாலும் அடிமைக்கூட்டம் ஜாலரா வை தூக்கிக்கொண்டு வந்து பலமாக தட்டுவார்கள். நீங்கள் கூறுவதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-அக்-202107:36:07 IST Report Abuse
Bhaskaran அண்ணா ஆரம்பித்த கட்சியை தன் சொந்தமாக மூத்த தலைவர்களை ஓரம் காட்டியவர் யார் என்பது தமிழகத்தில் அனைவர்க்கும் தெரியும்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
03-அக்-202103:48:45 IST Report Abuse
meenakshisundaram நம்பிக்கை துரோகம் ,ஏமாற்று ,பித்தலாட்டம் -இன்னும் என்னவெல்லாம் உண்டோ அதெல்லாம் திமுகவின் வரலாற்றிலே இடம் பெற்றுள்ளன .தமிழின (?) மக்கள் திமுகவின் தோற்றம் முதல் இன்று வரை உள்ளவற்றை அறிந்து கொண்டாலே போதும் இவை தவிர இன்னும் நய வஞ்சகம் போன்ற எல்லா வில்லத்தனங்களையும் எளிதில் ஒரு சினிமா போலெ பார்க்கலாம் .ஏனென்றால் திமுகவின் -கதை,வசனம் ,ட்யரக்ஷன் எல்லாமே முக தானே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X