சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் சிக்கல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை:பொது வினியோக திட்ட கணினிமய பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு, ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்வதற்கான அனுமதி, நேற்றிரவு வரை வழங்காததால், ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து, அத்தியாவசிய உணவு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்புவது, அங்கிருந்து கார்டுதாரர்களுக்கு வழங்குவது

சென்னை:பொது வினியோக திட்ட கணினிமய பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு, ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்வதற்கான அனுமதி, நேற்றிரவு வரை வழங்காததால், ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து, அத்தியாவசிய உணவு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்புவது, அங்கிருந்து கார்டுதாரர்களுக்கு வழங்குவது வரை, கணினிமய மாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு, விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. திட்ட செலவு 330 கோடி ரூபாய். கணினிமய திட்டத்தின் இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட ஒருங்கிணைப்பு பணிகள், 'ஒயாசிஸ்' என்ற தனியார் நிறுவனம் வாயிலாக செய்யப்படுகின்றன.

ஒப்பந்த காலம் ஐந்து ஆண்டுகள்.அதன்படி, 2016ல் வழங்கப்பட்ட ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது. புதிய ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படவில்லை. 'டெண்டர்' கோரி நிறுவனம் தேர்வு செய்ய, மூன்று மாதங்களுக்கு மேலாகும் என்பதால், ஏற்கனவே உள்ள நிறுவனத்திற்கு ஒப்பந்த காலத்தை, ஓராண்டுக்கு நீட்டிக்க உணவு துறை முடிவு செய்துள்ளது.

ஆனால், நேற்றிரவு வரை ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கருவிகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அதை சரிசெய்வது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், பொருட்கள் வினியோகம் பாதிக்க வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X