ஏர்போர்ட்டில் தியாகராஜனிடம் பாதுகாப்பு அதிகாரி வாக்குவாதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏர்போர்ட்டில் தியாகராஜனிடம் பாதுகாப்பு அதிகாரி வாக்குவாதம்

Added : செப் 30, 2021
Share
சென்னை:சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், நிதி அமைச்சர்தியாகராஜனிடம், சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், துாத்துக்குடி செல்வதற்காக நேற்று காலை, 5:15 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார்.அப்போது, பாதுகாப்பு சோதனைப் பிரிவில் அமைச்சரின்கைப்பையை, சி.ஐ.எஸ்.எப்., என்ற மத்திய தொழிலக பாதுகாப்பு

சென்னை:சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், நிதி அமைச்சர்தியாகராஜனிடம், சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், துாத்துக்குடி செல்வதற்காக நேற்று காலை, 5:15 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார்.அப்போது, பாதுகாப்பு சோதனைப் பிரிவில் அமைச்சரின்கைப்பையை, சி.ஐ.எஸ்.எப்., என்ற மத்திய தொழிலக பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சோதனை செய்தார். அதில், இரண்டு 'லேப்டாப்'கள் இருந்தன.

இதையடுத்து, 'இரண்டு லேப்டாப்களை ஏன் எடுத்துச் செல்கிறீர்கள்?' என அமைச்சரிடம், உதவி ஆய்வாளர் கேட்டார்.''நான் மாநில நிதி அமைச்சர். என் தேவைக்காக எடுத்து செல்கிறேன்,'' என்று அமைச்சர் பதிலளித்தார். அதை ஏற்காமல், அமைச்சரிடம் உதவி ஆய்வாளர் வாக்குவாதம் செய்தார்.அமைச்சரும் எதிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உதவி ஆய்வாளருக்கு தமிழ் தெரியவில்லை; ஹிந்தி மட்டுமே பேசியதால், அமைச்சரும் ஹிந்தியில் பதிலடி கொடுத்துள்ளார். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகள் விரைந்து வந்து, அமைச்சரை சமாதானம் செய்தனர்.

அப்போது அதிகாரிகளிடம், ''பயணியருக்கு உதவி செய்யவே பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கு தொந்தரவு செய்வதற்கு இல்லை. ''இரண்டு லேப்டாப்கள் எடுத்து செல்லக் கூடாது என்று ஏதாவது விதி உள்ளதா?'' என, தியாகராஜன் கோபமாக கேட்டார். அதற்கு, 'அப்படி எந்த விதியும் இல்லை' எனக்கூறிய அதிகாரிகள், நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டனர். வாக்குவாதம் செய்த சி.ஐ.எஸ்.எப்., உதவி ஆய்வாளரும் மன்னிப்பு கேட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X