அரசியல் செய்தி

தமிழ்நாடு

விசாரணைக்கு ஆஜராக அவகாசம் போலீசாருக்கு 'மாஜி' கடிதம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை:சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜபாஸ்கர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், உள்ளாட்சி தேர்தல் பணிகளை காரணமாக கூறி, விசாரணைக்கு ஆஜராவதற்கு அவகாசம் கோரியுள்ளார்.கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். சாலைகளில் பதிக்கப்படும் ஒளிரும்

சென்னை:சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜபாஸ்கர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், உள்ளாட்சி தேர்தல் பணிகளை காரணமாக கூறி, விசாரணைக்கு ஆஜராவதற்கு அவகாசம் கோரியுள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். சாலைகளில் பதிக்கப்படும் ஒளிரும் விளக்குகள், வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவிகள் கொள்முதல் செய்ததில், பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்கள் தரப்பட்டன.

இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 8.62 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது தெரிய வந்தது. அவர் மீது, கரூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின், ஜூலை 22ல் சென்னை மற்றும் கரூரில், விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், மனைவி விஜயலட்சுமியின் வீடு, அலுவலகம், குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிறுவனங்கள் என, 26 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, 25.26 லட்சம் ரூபாய் ரொக்கம், காப்பீட்டு முதலீடுகள், பணப் பரிவர்த்தனைக்கான ஆவணங்களை கைப்பற்றினர். சொத்து குவிப்பு தொடர்பாக, செப்., 30ல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார், விஜயபாஸ்கருக்கு 'சம்மன்' அனுப்பினர்.ஆனால், விசாரணைக்கு நேற்று அவர் ஆஜராகவில்லை. 'உள்ளாட்சி தேர்தல் பணிகள் காரணமாக, ஆஜராக முடியவில்லை; தேர்தல் முடியும் வரை அவகாசம் வேண்டும்' என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X