அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கபில்சிபலை காங்கிரசார் புறக்கணிக்க வேண்டும்'

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை:'காங்கிரஸ் தலைமையைவிமர்சிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபலை, காங்கிரசார் புறக்கணிக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:காங்., தலைவராக இருந்த ராகுல், 2019ல் நடந்த லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியில் இருந்து விலகினார். சோனியா மீண்டும் தலைமை பொறுப்பு ஏற்றார். அந்த பொறுப்பை மிக சிறப்பாக

சென்னை:'காங்கிரஸ் தலைமையைவிமர்சிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபலை, காங்கிரசார் புறக்கணிக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:காங்., தலைவராக இருந்த ராகுல், 2019ல் நடந்த லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியில் இருந்து விலகினார். சோனியா மீண்டும் தலைமை பொறுப்பு ஏற்றார். அந்த பொறுப்பை மிக சிறப்பாக இரண்டாண்டு காலமாக அவர் செய்து வருகிறார். அவரை தற்காலிக தலைவர் என அழைப்பதை, எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சோனியாவின் கடும் உழைப்பால் அமைந்த மத்திய அரசில், பதவி சுகம் அனுபவித்த போது, தலைமைக்கு எதிராக கபில்சிபல் என்றைக்காவது கருத்து கூறியது உண்டா?பதவியில் இருந்த போது கருத்து கூறாதவர்கள், இப்போது கருத்து கூறுவது அப்பட்டமான சந்தர்ப்பவாத செயல். பா.ஜ.,வை வீழ்த்த காங்கிரசுக்கு வலிமை சேர்ப்பதற்கு பதிலாக, தலைமையை விமர்சிக்கும் கபில்சிபலை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்க வேண்டும்.இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X