பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் பகுதிகளில் 7 நாட்கள் மதுக்கடைகளுக்கு 'லீவ்'

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தல்மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளில், ஏழுநாட்கள் மதுக்கடைகள் திறக்க, மாநில தேர்தல்ஆணையம் தடை விதித்து உள்ளது.ஆணையம் அறிக்கை:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது.

சென்னை:ஊரக உள்ளாட்சி தேர்தல்மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் பகுதிகளில், ஏழுநாட்கள் மதுக்கடைகள் திறக்க, மாநில தேர்தல்ஆணையம் தடை விதித்து உள்ளது.

ஆணையம் அறிக்கை:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. அதுமட்டுமின்றி, 28 மாவட்டங்களில் காலியாகஉள்ள, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 9ம் தேதி தேர்தல் நடக்கிறது.

முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் பகுதிகளில், 4ம் தேதி காலை 10:00 மணி முதல் 6ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை கடை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் இடங்களில், 7ம் தேதி காலை 10:00 மணி முதல், 9ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 12ம் தேதியும், தேர்தல் நடக்கும் பகுதிகள் மற்றும் ஐந்து கி.மீ., சுற்றளவில் உள்ள மதுக்கடைகள் மற்றும் மதுபான பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட நாட்களில் அப்பகுதிகளில், பீர், ஒயின் மற்றும்இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வது அல்லது மதுபான பார்கள் திறப்பது, மதுபானங்களை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு ஆணையம் கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X