1,155 சிறப்பு முகாம்கள் ரூ.3.85 கோடி ஒதுக்கீடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

1,155 சிறப்பு முகாம்கள் ரூ.3.85 கோடி ஒதுக்கீடு

Added : செப் 30, 2021
Share
சென்னை:'வருமுன் காப்போம் திட்டம்' வழியாக ஆண்டுக்கு, 1,155 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த, 3.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.சட்டசபையில், மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கையின் போது, 'கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்டத்தில், ஆண்டுக்கு ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள், மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும்' என்று அமைச்சர் சுப்பிரமணியன்

சென்னை:'வருமுன் காப்போம் திட்டம்' வழியாக ஆண்டுக்கு, 1,155 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த, 3.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

சட்டசபையில், மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கையின் போது, 'கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்டத்தில், ஆண்டுக்கு ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள், மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும்' என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படி, மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு, மருத்துவ வல்லுனர் குழுவினர் சென்று, மருத்துவ முகாம்கள் நடத்துவர். பொது மக்களை, பல்வேறு நோய்களில் இருந்து துவக்க நிலையிலே குணப்படுத்த, 385 வட்டாரங்களில், தலா மூன்று வீதம், ஆண்டுக்கு 1,155 மருத்துவ முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில், ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, கொழுப்பு அளவீடு பரிசோதனை, மலேரியா ரத்தத் தடவல் பரிசோதனை, இ.சி.ஜி., கண்புரை ஆய்வு, கொரோனா சம்பந்தமாக சளி பரிசோதனைகள் நடத்தப்படும்.மூன்று மருத்துவ முகாமிற்கு, ஒரு லட்சம் ரூபாய் வீதம், 3.85 கோடி ரூபாய் செலவாகும்.

அதை பரிசீலனை செய்த அரசு, ஆண்டுக்கு, 1,155 சிறப்பு மருத்துவ முகாம்களை, மீண்டும் புதுப்பொலிவுடன், கருணாநிதி வருமுன் காப்போம் திட்டத்தின் வழியாக நடத்த, 3.85 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X