பதவியில் இருக்கும் போது மக்களுக்கு நன்மை செய்யாவிட்டால் நான் இருந்தா என்ன செத்தா என்ன: துரைமுருகன் உருக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதவியில் இருக்கும் போது மக்களுக்கு நன்மை செய்யாவிட்டால் நான் இருந்தா என்ன செத்தா என்ன: துரைமுருகன் உருக்கம்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (54)
Share
வேலுார்:நான் பதவியில் இருக்கும் போது மக்களுக்கு நன்மை செய்யாவிட்டால், நான் இருந்தா என்ன செத்தா என அமைச்சர் துரைமுருகன் பேசினார். வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த தாதிரெட்டி கிராமத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வள்ளிமலையில் பேசியதாவது:நான் தொடர்ந்து காட்பாடியில் வெற்றி பெற

வேலுார்:நான் பதவியில் இருக்கும் போது மக்களுக்கு நன்மை செய்யாவிட்டால், நான் இருந்தா என்ன செத்தா என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.latest tamil news
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த தாதிரெட்டி கிராமத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வள்ளிமலையில் பேசியதாவது:நான் தொடர்ந்து காட்பாடியில் வெற்றி பெற காரணம் இந்த தொகுதியை கோவிலாக பார்க்கிறேன். ஓட்டு போட்டவர்கள் என்னை வாழ வைத்த தெய்வங்களாக கருதுகிறேன்.யாரொருவன் ஓட்டு போட்டவர்களை நன்றிக்குறியவர்களாக பார்க்கிறானோ அவன் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். ஆனால் ஓட்டு போட்டவர்களை யாரோ என நினைப்பவர்கள் அந்த ஊருக்குள்ளேயே மறு முறை செல்ல முடியாது.

50 ஆண்டுகாலம் எனக்கு கண் கண்ட தெங்வங்களாக இருந்தவர்கள் இந்த காட்பாடி மக்கள் தான். பலபேர் நினைப்பார்கள் நான் மந்திரி ஆவதற்காக பேசுகிறேன் என்று. ஆனால் எதிர் கட்சியாக இருக்கும் போதும் எனக்கு வாக்காளித்தவர்கள் இவர்கள் தான்.மேலும் நான் இப்போது பதவியில் இருக்கும் போது மக்களுக்கு நன்மை செய்யாவிட்டால் நான் இருந்தா என்ன செத்தா என்ன. இவ்வாறு அவர் பேசினார்.துரைமுருகனின் இந்த உருக்கமான பேச்சை கேட்ட அங்கிருந்த பெண்கள் கண்கலங்கினர்.


latest tamil news

கைகலப்பு:விண்ணம்பள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தி.மு.க., வை சேர்ந்த ஜோதி, பாபு, அ.தி.மு.க., சுயே., என ஆறு பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஜோதி என்பவர் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்வதாக தகவல் வந்தது. அமைச்சர் துரைமுருகன் விண்ணம்பள்ளியில் பேசி விட்டு சென்ற பிறகு ஜோதி தரப்பினருக்கும், பாபு கோஷ்டியினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் 10 பேருக்கு காயமடைந்தனர். மேல்பட்டி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X