ஆவணம் இல்லாமல் வந்த 32 லாரி சரக்குகள் பறிமுதல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆவணம் இல்லாமல் வந்த 32 லாரி சரக்குகள் பறிமுதல்

Added : செப் 30, 2021
Share
சென்னை:டில்லியில் இருந்து போதிய ஆவணங்கள் இன்றி, சென்னை வந்த சரக்குகளை, வணிக வரி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.டில்லியில் இருந்து சென்னைக்கு, நேற்று முன்தினம் ரயிலில் வந்த சரக்குகளுக்கு, போதிய ஆவணங்கள் இல்லை என்று வணிக வரி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ரயிலில் வந்த சரக்குகள் ஏற்றப்பட்ட 32 லாரிகளை பறிமுதல் செய்து, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வணிக வரி

சென்னை:டில்லியில் இருந்து போதிய ஆவணங்கள் இன்றி, சென்னை வந்த சரக்குகளை, வணிக வரி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டில்லியில் இருந்து சென்னைக்கு, நேற்று முன்தினம் ரயிலில் வந்த சரக்குகளுக்கு, போதிய ஆவணங்கள் இல்லை என்று வணிக வரி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, ரயிலில் வந்த சரக்குகள் ஏற்றப்பட்ட 32 லாரிகளை பறிமுதல் செய்து, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வணிக வரி நுண்ணறிவு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.அந்த லாரிகளில் வந்த சரக்குகளை, பிரித்து ஆய்வு செய்யும் பணியில், வணிக வரி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது:ஆவணங்கள் இல்லாமல் சரக்குகள் வருவதாக தகவல் கிடைத்தது. ராயபுரம் ரயில் நிலையம் வெளியே, லாரிகளில் சரக்குகள் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, சரக்குகள் தொடர்பான ஆவணங்களை சோதனை செய்தபோது, பல்வேறு முரண்பாடுகள் இருந்தன. இதையடுத்து, லாரிகளை பறிமுதல் செய்து, சரக்குகள் அனைத்தையும் நேரடி சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம்.

அதில், உலர் பழங்கள், சமையல் அறை உபகரணங்கள், காலணிகள், ஜவுளிகள், தலையணைகள், பட்டாசுகள் என, பல்வேறு பொருட்கள் இருந்தன. சரக்குகளை வரவழைத்த, 'டீலர்'களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளோம். அவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், சரக்குகள் திருப்பி ஒப்படைக்கப்படும். இல்லையெனில், அதற்குரிய அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X