தென்மேற்கு பருவ மழை 18 சதவீதம் அதிகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்மேற்கு பருவ மழை 18 சதவீதம் அதிகம்

Added : செப் 30, 2021
Share
சென்னை:தென்மேற்கு பருவ மழைக்கான இயல்பான காலம் முடிந்துள்ள நிலையில், மழையின் பதிவு குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:உள் தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்று வீசும் என்பதால் தமிழகத்தில் மழை தொடரும்.தென்மேற்கு

சென்னை:தென்மேற்கு பருவ மழைக்கான இயல்பான காலம் முடிந்துள்ள நிலையில், மழையின் பதிவு குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:

உள் தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்று வீசும் என்பதால் தமிழகத்தில் மழை தொடரும்.தென்மேற்கு பருவ மழையின் இயல்பான காலமான ஜூன் 1 முதல், செப்., 30 வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 செ.மீ., மழை பெய்துள்ளது. இயல்பாக 33 செ.மீ., பெய்ய வேண்டும். இந்த ஆண்டு 1௮ சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை 50 செ.மீ., மழை பெய்துள்ளது. இயல்பான அளவு 46 செ.மீ., என்பதால், சென்னையில் 9 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. 26 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியே மழை பெய்துள்ளது.பெரம்பலுார் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை விட 68 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. திருப்பத்துார், தேனி, பெரம்பலுார், கோவை மாவட்டங்களில் 50 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. செங்கல்பட்டு, விருதுநகர், தென்காசி, குமரி மாவட்டங்களில் 10 - 15 சதவீதம் வரை மழை குறைவாக பெய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை மையத்தின் விஞ்ஞானி கீதா வெளியிட்ட அறிவிப்பு:தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை என 15 மாவட்டங்களில் இன்று முதல் 4ம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் மிக கன மழைக்கும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X