சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏ.ஐ.ஐ.பி., ரூ.2,700 கோடி கடனுதவி

Added : செப் 30, 2021
Share
Advertisement
பீஜிங்:சீனாவில் செயல்படும் ஆசிய அடிப்படை கட்டமைப்பு முதலீட்டு வங்கியான, ஏ.ஐ.ஐ.பி., சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, 2,700 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.கடந்த 2016ல் சீனாவின் பீஜிங் நகரில் ஏ.ஐ.ஐ.பி., துவங்கப்பட்டது. ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகளின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியுதவி செய்ய இந்த வங்கி ஏற்படுத்தப் பட்டது. இதில் சீனா, 26 சதவீதம், இந்தியா, 7.5

பீஜிங்:சீனாவில் செயல்படும் ஆசிய அடிப்படை கட்டமைப்பு முதலீட்டு வங்கியான, ஏ.ஐ.ஐ.பி., சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, 2,700 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2016ல் சீனாவின் பீஜிங் நகரில் ஏ.ஐ.ஐ.பி., துவங்கப்பட்டது. ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகளின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியுதவி செய்ய இந்த வங்கி ஏற்படுத்தப் பட்டது. இதில் சீனா, 26 சதவீதம், இந்தியா, 7.5 சதவீதம், ரஷ்யா, 5.93 சதவீதம், ஜெர்மனி, 4.5 சதவீத பங்கு மூலதனத்தை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் ஏ.ஐ.ஐ.பி., முதலீட்டு பிரிவின் துணை தலைவர், டி.ஜே.பாண்டியன் கூறியதாவது: இந்தியாவில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட 28 திட்டங்களுக்கு, வங்கி 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. இதில் சென்னை கலங்கரை விளக்கம்- பூவிருந்தவல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 2,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை போக்குவரத்து துறை மேலும் ஒருங்கிணைக்கப்பட்டு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி காணும். சுற்றுச்சூழல் மாசு கட்டுப்படுத்தப்படும். பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் போக்குவரத்து உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X