பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏன்?

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை:மாற்று வாக்காளர் அடையாள அட்டைகளை இலவசமாக வழங்கும் பணியை துவக்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களுக்கும் மாற்று அடையாள அட்டைகளை இலவசமாக வழங்கும்படி, அனைத்து மாநிலங்களையும் இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் அலுவலகம், மாற்று அடையாள அட்டையை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. 342 அரசு 'இ - சேவை'

சென்னை:மாற்று வாக்காளர் அடையாள அட்டைகளை இலவசமாக வழங்கும் பணியை துவக்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அனைத்து வாக்காளர்களுக்கும் மாற்று அடையாள அட்டைகளை இலவசமாக வழங்கும்படி, அனைத்து மாநிலங்களையும் இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் அலுவலகம், மாற்று அடையாள அட்டையை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

342 அரசு 'இ - சேவை' மையங்களிலும் மாற்று அடையாள அட்டை வழங்கும் பணி இன்று துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதுவரை, அரசு இ -சேவை மையங்களில் வாக்காளர் அடையாள அட்டைக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு, தேர்தல் கமிஷனுடன் 'எல்காட்' நிறுவனம் மற்றும் அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதேபோல, மாற்று அடையாள அட்டையை இலவசமாக வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டியுள்ளது. இதில் காலதாமதம் ஏற்பட்டதால், இப்பணி திட்டமிட்டபடி இன்று துவக்கப்படவில்லை.ஒப்பந்தம் கையெழுத்தானதும் மாற்று அடையாள அட்டை வழங்கும் பணி துவக்கப்படும் என, தேர்தல் கமிஷன் அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X