116 கைதிகள் பலி எதிரொலி ஈக்வடார் சிறையில் அவசர நிலை

Added : செப் 30, 2021
Share
Advertisement
குவிட்டோ:ஈக்வடார் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 116 கைதிகள் உயிரிழந்ததை தொடர்ந்து, நாட்டில் உள்ள சிறைகளில், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குயாகுவில் என்ற பகுதியில் உள்ள சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து செயல்படுவதால்
 116 கைதிகள் பலி எதிரொலி ஈக்வடார் சிறையில்  அவசர நிலை

குவிட்டோ:ஈக்வடார் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 116 கைதிகள் உயிரிழந்ததை தொடர்ந்து, நாட்டில் உள்ள சிறைகளில், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குயாகுவில் என்ற பகுதியில் உள்ள சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து செயல்படுவதால் அவ்வப்போது அவர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்து வருகின்றன. இந்த சிறையில் 28ம் தேதி கைதிகளுக்கு இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதில் கைதிகள் ஒருவருக்கொருவர் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தங்களிடம் இருந்த கைத் துப்பாக்கிகளை பயன்படுத்தியும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். நீண்ட போராட்டத்திற்குப் பின், அந்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது.இந்த பயங்கர கலவரத்தில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ஐந்து பேர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.

இதைத்தவிர காயமடைந்த 80 கைதிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்நிலையில் நாடு முழுதும் உள்ள சிறைகளில் அவசர நிலை அறிவித்து, ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாசோ நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற நேரங்களில் ராணுவத்தினரை அழைக்கும் அதிகாரம் சிறை நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X