சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிம்லாவில் சிக்கிய ஆப்கன் புள்ளி 'ஹெராயின்' கடத்தலில் திருப்பம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
குஜராத் முந்த்ரா துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ 'ஹெராயின்' போதை பொருளை, வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில், 'ஐ.இ.கோட்' எனப்படும் இறக்குமதி,- ஏற்றுமதி லைசென்ஸ் பெற்ற, சென்னையைச் சேர்ந்த ஏஜென்ட் மச்சாவரம் சுதாகர், அவரது மனைவி துர்கா பூரண வைஷாலி சிக்கினர். இந்த போதை பொருள், டில்லியில் இருக்கும் அமித் என்பவருக்கு செல்ல

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3,000 கிலோ 'ஹெராயின்' போதை பொருளை, வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில், 'ஐ.இ.கோட்' எனப்படும் இறக்குமதி,- ஏற்றுமதி லைசென்ஸ் பெற்ற, சென்னையைச் சேர்ந்த ஏஜென்ட் மச்சாவரம் சுதாகர், அவரது மனைவி துர்கா பூரண வைஷாலி சிக்கினர்.

இந்த போதை பொருள், டில்லியில் இருக்கும் அமித் என்பவருக்கு செல்ல வேண்டியது என தெரிய வந்தது. இருவர் கைதுஇந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் குறித்தும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் டில்லி, நொய்டா உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடத்தினர். இறுதியில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் மதன்குமார் கூறியதாவது:ஹெராயின் கடத்தல் விவகாரத்தில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நான்கு பேரும், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணும், டில்லியில் கைது செய்யப்பட்டனர். மேலும், டில்லியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. தொடர்ச்சியாக, டில்லியில் உள்ள மற்றொரு குடோன் மற்றும் உ.பி., மாநிலம் நொய்டாவில் இருக்கும் ஒரு குடோனிலும் 'ரெய்டு' நடந்தது.

அதில், 16 கிலோ ஹெராயின், 10 கிலோ கோகைன், 'மோலி டிரக்' என்ற போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போதை பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்படும் நபர், சிம்லாவில் தங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. செப்., 26ல் வருவாய் புலனாய்வு துறையினர் அங்கு சென்றனர். சிம்லாவுக்கு வெளியே இருக்கும் ஒரு ஓட்டலில், உள்ளூர் போலீஸ் உதவியுடன் அதிகாலை 3:00 மணியளவில் சோதனை நடத்தினர்.


நெருக்கமான தொடர்பு

அங்கு இருந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முக்கிய புள்ளி சிக்கினார்; அவரிடம் இருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவருடன், அதே நாட்டைச் சேர்ந்த மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் சிக்கினார்.அந்த முக்கிய புள்ளி, கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அவரது வேலையே, ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்படும் போதை பொருளை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்வது தான்.இதன் வாயிலாக கிடைக்கும் பணத்தில், இந்தியாவில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு கொடுத்தது போக, மீதம் இருப்பதை, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாத குழுக்களுக்கு அனுப்பி வந்தார்.

மருத்துவ சிகிச்சைக்காக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமானோர் வருகின்றனர். அவர்களுக்கு மொழிபெயர்த்து உதவ பலரும் இந்தியாவுக்கு வந்து, பல ஆண்டுகளாக தங்கி உள்ளனர். அதில் ஒருவர் தான் முக்கிய புள்ளிக்கு உதவியாக இருந்து உள்ளார். அவரும் இப்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இவர்களுக்கு உதவியது, டில்லியில் கைதான உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண். 'பப்' மற்றும் 'கிளப்'களில் நடனமாடக் கூடியவர். அங்கு வரும் பணக்காரர்களுடன், அந்த பெண்ணுக்கு நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது; அந்த தொடர்பை பயன்படுத்தி, போதை பொருள் விற்பனை செய்துள்ளார். பழ வியாபாரிகள்இந்தியாவின் பல நகரங்களிலும் இப்பணியை செய்துள்ளார். இவர் தவிர, ஆப்கானிதானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்யும் பழ வியாபாரிகள், சிறு கடைகள் நடத்துவோர் என பலரும், போதை பொருட்களை சில்லரையாக விற்கின்றனர்.

இவர்களை, 'drug mules' என்று அழைக்கின்றனர். அதாவது, போதை பொருட்களை சுமந்து செல்லும் கோவேறு கழுதை என்பது அதன் பொருள். சிம்லாவில் கைதானவர்களை பற்றிய தகவல்களை தற்போது வெளியிட, வருவாய் புலனாய்வு துறையினர் மறுத்து விட்டனர். இவ்வாறு மதன்குமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X