பொது செய்தி

இந்தியா

தேசிய சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுடில்லி:'தேசிய சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை அறிவிக்கப் படுகிறது. 'நடப்பு நிதியாண்டின், அக்., - டிச., வரையிலான மூன்றாம் காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் ஏற்கனவே உள்ளபடி மாற்றமின்றி தொடரும்' என, மத்திய நிதியமைச்சகம்

புதுடில்லி:'தேசிய சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை அறிவிக்கப் படுகிறது. 'நடப்பு நிதியாண்டின், அக்., - டிச., வரையிலான மூன்றாம் காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் ஏற்கனவே உள்ளபடி மாற்றமின்றி தொடரும்' என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி பொது சேம நல நிதிக்கான வட்டி, 7.1 சதவீதமாக தொடருகிறது. தேசிய சேமிப்பு பத்திர முதலீட்டிற்கான வட்டி, 6.8 சதவீதமாக நீடிக்கிறது.

ஓராண்டு டிபாசிட்டிற்கான வட்டி, 5.5 சதவீதம்; பெண் குழந்தைகளுக்கான 'சுகன்ய சம்ரிதி யோஜனா' திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கு, 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படும். மூத்த குடிமக்களின் ஐந்தாண்டு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி, 7.4 சதவீதமாக நீடிக்கிறது. மூத்த குடிமக்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி வழங்கப்படுகிறது.

சேமிப்பு கணக்கிற்கான வட்டி, 4 சதவீதமாக நீடிக்கிறது. 1 - 5 ஆண்டுகள் வரையிலான குறித்த கால வைப்பு நிதிக்கு, 5.5 - 6.7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். ஐந்தாண்டு தொடர் வைப்பு நிதிக்கு, 5.8 சதவீத வட்டி தொடருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X